அன்பே கொஞ்சம் காதல் கொடு 21-25

அன்பே கொஞ்சம் காதல் கொடு 21-25

அத்தியாயம்-21

கதிரின் கைக்குள் அவன் அணைப்பில் இருந்தவள், இப்போது நன்றாக அழுதாள் அவள் உடல் குலுங்கியது மெதுவாக அவளது முதுகினைத் தடவி கொடுத்தான்.

அழுகை விசும்பலாக மாறியது, மெல்ல மெல்ல அப்படியே தூங்கிவிட்டாள்...

கதிருக்குத்தான் இப்போது தலைவலியாக இருந்தது...இங்க இவளை சமாளிக்கனும் ஊருக்குப்போன அம்மாவ சமாதானப் படுத்தி இங்க கூட்டிட்டு வரணும்...இப்பவே கண்ணைகட்டுதே என்ற நிலைதான் கதிருக்கு... 

மனயாளைத் திரும்பி பார்க்க ஆழ்ந்த உறக்கத்தில், மென்மையான முகம் இப்போது அழுது, கலங்கி இருந்தது தூக்கத்திலும்...எப்படி இவளை வழிக்கு கொண்டுவர என சிந்தனை...

இப்படியாக பல யோசனையில் இருந்தவன் நல்லத்தூங்கிவிட்டான்...

காலையில் எதோ சத்தம் கேட்கவும் விழித்துப் பார்க்க, குளித்துவிட்டு வெளியே வந்தவள் அவன் தூங்குகின்றான் என்று நினைத்து மெதுவாக வந்து உடை மாற்றவும்...கதிருக்குத்தான் காலையிலயே நல்லத் தரிசனம்...இப்போதே அவளைத் தனது கைவளைவிற்குள் கொண்டுவந்து அவளை ஆண்டுக்கொள்ள வந்த வேட்கையை என்ன செய்யவெனாறு தெரியாமல்...அப்படியேத் திரும்பி கவிழ்ந்துப் படுத்துக்கொண்டான்(கதிரு நீ இந்த ஜென்மத்துல அவள சமாதானப்படுத்திடுவ....டவுட்டுத்தான்)

அவள் சென்றதும் மணியைப் பார்த்தான் மணி எட்டுத்தாண்டியாகிவிட்டது... ஐயோ என்று பதறி எழுந்தவன் அவசரமாக குளித்து தயாராகி சாப்பிட வந்தவன்...

அங்கு ஏற்கனவே நிலா சாப்பிட்டுக் கொண்டிருக்கவும் அவளருகில் சென்று அமர்ந்துக்கொண்டான், அவளோ சாப்பிடுறேன்னு சாப்பாட்டைக் கொறித்துக்கொண்டிருக்க, இவ்வளவாது இறங்கிவந்து சாப்பிடுறாளே என்ற நிம்மதியில் சாப்பிட்டுக் கல்லூரிக்கு கிளம்பிவிட்டான்...

இரண்டாமாண்டு வகுப்பிற்கு அவன்தான் இன்சார்ஜ் அதனால் எல்லாத் தகவலும் அவனுக்கு காலையிலயே வந்துவிடும், அன்றுதான் பத்து நாட்களுக்குப்பின் கல்லூரிக்கு வந்ததால் அதை பார்க்கமுடியாமல் போயிட்டு...பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்.

மதியம் சாப்பிடும்போது நிலாவிற்கு போனில் அழைக்க அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது, இராட்சஷி பேசாம இருந்தே சாவடிக்குறா என்று பொறுமையிழந்தவன்...பாதிச்சாப்பாட்டை அப்படியே வைத்துவிட்டு...எழும்பி வெளியே நடந்தான்.

மதியத்திற்குமேல் வகுப்பிற்குள் வந்தவனது பார்வை எப்போதும் போல நிலா இருக்கும் இடத்திற்கு தானாக போக, அப்படியே நின்றுவிட்டான் அதிர்ச்சி, இவ எப்போம இங்க வந்தா? எப்படிவந்தாள்? என்று யோசித்து நின்றான்...

நிலாவோஅவனைக் கண்டுக்கவேயில்லை...

கதிர் இப்போது சுதாரித்து பாடம் நடத்திக்கொண்டிருந்தான்...நிலாவின் முழுக் கவனமும் பாடத்தில் இருந்தது...

எந்த விதமான அசைவோ குறும்புத்தனமோ எதுவுமே இல்லை...

கூட படிக்கின்றவர்களுக்குமே ஆச்சர்யம்...கதிர் சார் கிளாஸ்ல இன்னும் எந்த சேட்டையும் நிலா செய்யலையே என்றுதான்...

கதிர் வகுப்பு முடித்து சென்றுவிட்டான்...இனியா நிலாவைத் திரும்பி பார்த்ததும்...என்னவென்று புருவம் உயர்த்திக் கேட்க...நிலாவோ ஒன்றுமில்லை என்று தலையாட்டினாள்...

இனியா அசையாமல் நிலாவைப் பார்க்க மனதின் பாரம் தாங்கமுடியாமல் எல்லாவற்றையும் அவளிடம் கொட்டிவிட்டாள்...

இனியா "சாரோட எல்லா குணமும் தெரிஞ்சுதான அவரைக் கல்யாணம் செய்துக்கிட்ட, அப்போ அதுக்கு தகுந்த மாதிரி உன் மனதையும் நீ தயார்படுத்தியிருக்கணும், உன்னோடத் தப்பு அது...யோசிச்சிப் பாரு எல்லா சண்டையிலும் நீதான அவருக்கிட்ட சமாதானமா போவ...இப்பவும் அப்படியே சமாதானமா போயிருக்கலாமே? ஏன் இவ்வளவு சிக்கலாக்கி வச்சிருக்க? அவளை சரியாக புரிந்துக் கேட்டாள்...

ஏன்னா நீ கொடுக்குற அன்பு பாசம் எல்லாவற்றையும் திரும்ப வேணும்னு எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்ட அப்படித்தான?”

நிலா அமைதியாக இருந்தாள்... “அன்னைக்கு நீ மயங்கிவிழுந்தப்போம் அப்படித் துடிச்சி நம்ம காலேஜ் முன்வாசல் வரைக்கும் அவ்வளவு தூரத்தையும் கடந்து தூக்கிட்டுப் போனாங்க...கார்ல எங்க நீ விழுந்திருவியோன்னுதான் என்னை பிடிச்சிட்டு உட்காரச் சொன்னாங்க... வண்டியோட்டும்போது பயந்து பயந்து உன்னை திரும்பி பார்த்தாங்க. ஹப்பா எவ்வளவு பாசம் பொண்டாட்டி மேல...

உன்னோடக்கோபம் நியாயம்னா அவங்க கோபமும் நியாயந்தான...

என்னோடக் கதிர் மாம்ஸ்னு மூச்சிக்கு மூந்நூறு தடவைச் சொல்லுவ... அந்தக் கதிர் மாம்ஸ் மேல உள்ளக் காதல் எங்கம்மா போச்சுது?

இவ்வளவு பாசம் வச்சிருக்க உன் கதிர் மாம்ஸ்ஸயே உன்னால மன்னிக்க முடியல...அப்படிப்பட்ட உன்னைத்தான் எல்லாரும் அன்புத் தேவதைனு சொல்றாங்க” என்றதும்...நிலாவின் கண்களில் கண்ணீர் தானாக வந்தது...

நிலாவிற்கு இப்போ பதிலே சொல்லமுடியவில்லை..

அமைதியாக இருக்கவும் “நீ இன்னைக்கு இங்க வர்றது சார்க்கு தெரியாதுதான...அவர் உன்னைப் பார்த்ததும் அதிர்ச்சியில நின்னாங்களே...

அவருக்கு ரொம்ப வருத்தம்போல...முகமே சரியில்லை...”என்றாள்.

அதற்குள்ளாக அடுத்த வகுப்புத் தொடங்கவும் அவர்கள் பேச்சுத் தடைப்பட்டது.

கல்லூரி விட்டதும் நிலாவும் இனியாவும் வெளியேவந்தனர்... கதிர் காருக்கருகில் காத்திருப்பான் என்ற நம்பிக்கையில் நிலா செல்ல அவன் இன்னும் வரவில்லை.

இனியா "நிலா, அவர் செய்த தப்பிற்கு உணர்ந்து மன்னிப்புக் கேட்டுட்டாங்கனு சொன்ன. அப்போ ஏன் பிரச்சனைகளை இன்னும் பெருசாக்கிக்கற...ஃப்ரியாவிடு எல்லாம் சரியாகிடும்...நாளைக்குப் பார்க்கலாம்பா” என்று சென்றுவிட்டாள்.

கதிருக்காக காத்திருக்க சிறிது நேரத்தில் வந்தவன், நிலாவை கண்டும் காணத மாதிரி வண்டியை எடுத்து கிளம்பிவிட்டான்.

நிலா அப்படியே உறைந்து நின்றுவிட்டாள்...விட்டுட்டுப் போவான்னு எதிர்பார்க்கவில்லை...அப்படியே அங்கிருந்த மரத்தைசுற்றியுள்ள திண்டில் அமர்ந்தவளுக்கு சிந்தனையே ஓடவில்லை..எங்கோ பார்த்திருந்தாள்...

எவ்வளவு நேரமாக அப்படியிருந்தாளோ?அவளது போனில் அழைப்புச் சத்தம் கேட்கவும் திடுக்கிட்டு பார்க்க லேசாக இருள் சூழ ஆரம்பித்திருந்தது...

போனை எடுத்துப்பார்க்க அவளது அண்ணன்...எடுத்துப் பேசியவள் அவன் சொல்வதற்கு தலையாட்டிவிட்டு...வெளியே வர அங்கு சித்தார்த் காரிலிருந்தான்...

கதிரத்தான்தான் உன்னை அழைச்சிட்டு வரச்சொன்னாங்க என்றவன் வேறு எதுவுமே அவளிடம் பேசாமல் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்...அங்கோ தென்னவனும், ஜோதியும் இருந்தனர்...நிலா பெருமூச்சொன்றை விட்டவள்

அடுத்தப் பஞ்சாயத்தா என்று நினைத்தவள் மெதுவாக வந்தமர்ந்தாள்...

அவளுக்கு சத்துமாவுக் கஞ்சி கலக்கி எடுத்து வந்தவர் அவளது கையில் கொடுத்துவிட்டு அமைதியாக இருந்தார்...ஒருவரும் பேசவில்லை... அவரவர் விடும் மூச்சுக்காற்றின் சத்தமே வந்தது...

கதிர் இப்போது பேசத்தொடங்கினான்

"எனக்குத் தெரியாமலயே இன்னைக்கு காலேஜ்க்கு வந்திருக்கா...என்கிட்ட ஒருவார்த்தையாவது சொல்லிருக்கலாம்...

எப்படி வந்தானுக்கூடத் தெரியாது. எனக்கே இப்போ பயமாயிருக்கு எந்த நேரத்துல என்னச் செய்வாளோனு...இப்பவும் சின்ன பிள்ளைமாதிரி நடந்துக்கிட்டா எப்படி?

அதுவுமில்லாமல் எனக்கு ரொம்பக் கஷ்டாமாயிருக்கு அவ இப்படியிருக்குறதைப் பார்த்து. எப்படி இவளை சமாளிக்கறதுனு எனக்குத் தெரியலை...இப்போதைக்கு காலேஜ்க்கு வரவேண்டாம்.

இந்த மார்னிங்க் சிக்னஸ் முடிஞ்சதும் பார்த்துக்கலாம் என்க...அதை அவளுக்குப் புரியவைங்க” என்றான்...

நிலாவோ "நான் போவேன், எனக்கு இப்போதைக்கு என் படிப்பும் முக்கியம்"

தென்னவனுக்குமே இப்போ நிலா மேல் கோபம் வந்தது "ஒரு மாதம் போகலைன்னா ஒன்னுமாகாது, வீட்டிலயே இரும்மா"

நிலா " இல்லப்பா நான் போகணும், என் படிப்பை நான் நல்லபடியாக முடிக்கணும்"

ஜோதி "என்னடி இது புதுசா தொடங்குற, மருமகனே சொல்றாங்க வேண்டாம்னு, தீ என்ன பிடிவாதம் பிடிக்கிற, என்ன நினைச்சிட்டிருக்க மனசுல, அப்படி படிச்சுத்தான் என்னப் பண்ணப்போற" என்றார்.

"எதிர்காலத்துல எங்கம்மாவுக்கு பிடிக்கலை, எங்க குடும்பம் இப்படியாகிட்டு, அப்படி இப்படினு எதாவது ஒருக் காரணத்தை வச்சு என்னை மறுபடியும் கையைப்பிடிச்சு வெளியத் தள்ளிட்டாங்கனா, நான் எங்கப் போவேன், நடுத்தெருவுலயா நிற்கமுடியும், இல்லை யாருக்கிட்டயும் போய் பிச்சை எடுக்க முடியுமா, என் பிள்ளைங்களை எப்படி வளர்ப்பேன், என் படிப்பு எனக்கு உதவும் அதுதான்” என்று சொன்னள் அப்படிறே அங்கயே மடங்கி அமர்ந்து அழுதாள்...

யாருக்கு என்ன பதில் சொல்லமுடியும், நாளைக்கு இதைப்போலக் கோபம்வந்து வெளியனுப்பினா என்ன பண்றது...அவளது வாழ்க்கைய அவ வாழணும்லா...அதிகமாக நம்பிக்கை வைத்து காதலித்து கல்யாணம் செய்தவனே இப்படிச் செய்தது ..அவளோட மனசுல அது ஆழமா பாதிச்சிட்டுது...

இதைவிட ஒரு தண்டனை வேணுமா, கத்தியின்றி தன்னவனின் உயிரை தனது நாவினால் எடுத்துவிட்டாள்... 

இதைக்கேட்டதும் கதிர் ஒன்றுமே சொல்லவில்லை அப்படியே அமைதியாக தனதறைக்கு சென்றுவிட்டான்...கதிரின் மனது இப்போது ஊமையாக அழுதது...தனது மனைவிக்கு நாம எப்படியாப்பட்ட எண்ணங்களை மனதில் விதைத்துவிட்டோம், அதற்கு நம்முடைய செயல் காரணமாக இருந்துவிட்டதே என்றுதான் வருத்தப்பட்டான்...

இப்போது ஜோதி அவளை எழுப்பித் தேற்றினார்...

கதிருக்காக எல்லோரும் காத்திருந்தனர், அவன் கீழே இறங்கி வரவில்லையென்றதும் சித்தார்த் அவனுக்கு போனில் அழைத்ததும் கீழே வந்தான்...

“உங்களுக்கு நிலாவைப் பார்த்துக்க கஷ்டமாயிருந்தா நாங்கவேணா கொஞ்சநாள் எங்கவீட்டுல வச்சுப் பார்த்துக்கட்டுமா என்று மருமகனிடம் தணிந்துக் கேட்க...இன்னைக்கே எங்ககூட அழைச்சிட்டுப் போயிடுறோம்" என்றதும்

சரி ... என்று தலையாட்டினான். நிலாவோ இல்லை நான் இங்கயே இருத்துக்குறேன் .. காலேஜ்க்கு அவங்ககூடவே போயிக்குறேன்...என்று மெதுவாக சொல்ல...

எல்லோருக்கும் நன்றாகப் புரிந்தது கதிரின் மேல் உள்ளக் காதல் அவளை பைத்தியமாக்கி வைச்சிருக்கு என்று...

‘அவன்கூட சண்டையும் போடணும்...அவனைவிட்டுப் பிரியவும்கூடாது...இது என்னடா புதுமாதிரியான சண்டை’ என்றுதான் சித்தார்த் நினைத்தான்

வாங்க எல்லரும் இங்கயே சாப்பிட்டுக்காலாம் என்று அனைவரையும் அழைத்தார்..இல்லையென்றால் இந்த இரண்டும் வீம்பு பிடித்து சாப்பிடாம இருக்குமென்று மகளையும் மருமகனையும் நன்றாகப் புரிந்துவைத்திருந்தார்...

அதனால் இப்போது சாப்பாடுக்கொடுக்க கதிரும் நிலாவுமே எதுவும் சொல்லாமல் சாப்பிட்டனர்...

தென்னவன் "நிலாம்மா, இதுக்குமேலயும் பிரச்சனைத் தொடர்ந்துச்சுனா, நான் என்னோட ரீதியில தீர்த்துவச்சிடுவேன்...

பார்த்து நடந்துக்கோ” என்று எச்சரிக்கை செய்தவிட்டே கிளம்பினார்.

நிலாவிற்குத் தெரியும் இனி தகப்பன் இடைபட்டால் பிரச்சனை எப்படி முடியும் என்று அதானால் தலையை அங்குமிங்கும் வேகமாக ஆட்டி “சரிப்பா” என்றாள்.

எல்லோரும் சென்றதும் கதிர் மொட்டை மாடிக்குச் சென்றுவிட்டான்...

நிலாவோ அறைக்குள் சென்று தனது கல்லூரிக்கு கொண்டுச் செல்லும் பையை எடுத்து தனதுப் பாடங்களில் கவனம் செலுத்தினாள்...

தீவிரமாக எல்லாம் எழுதிப் படித்து முடித்தவள் அங்கயே படுத்து அப்படியேத் தூங்கிவிடவும், கதிர் வந்துப் பார்த்துவிட்டு எல்லாம் ஒதுக்கி வைத்து, அவளை சரியாகப் படுக்கவைத்தவன் அவளருகிலயேப் படுத்து தூங்கிவிட்டான்.

அதீத நம்பிக்கைப் பொய்த்துப் போகும்போது விரக்தியே மிஞ்சும் இப்போது நிலாவின் நிலையும் அதுதான்...

மறுபடியும் பழைய நிலாவாக எனக்கு அவள் வேண்டும் என்று நினைத்தானவன்...

காலையில் எழுந்து அவளுக்கு எந்த வேலையும் இருக்காது, எல்லாவற்றிற்கும் ஆள்வைத்தாகிற்று. அதானல் குளித்து தயாராகி கீழே வந்தவள் காபி எடுத்துக்குடித்துவிட்டு கணவன் வரவிற்காக காத்திருப்பாள், கதிர் வந்ததும் சாப்பிட்டுவிட்டு கல்லூரிக்கு செல்வர் ...

இப்படியாக ஒருமாதம் கடந்த நிலையில் நான்காவது மாதம் மத்தியில் மருத்தவமனைக்கு கதிர்தான் அழைத்துச் சென்றான்...

எது எப்படியோ இந்த நேரங்கள் கணவனின் அருகாமைப் பெண்களுக்கு பெரிய பலம்தான், அதைத்தான் நிலாவும் எதிர்பார்த்தாள்...அவளது ஹார்மோன்களின் மாற்றமும் அவளை ஒருவழியாக்கியிருந்தது...கணவனின் அருகாமையைத் தன்னை மீறி தேடினாள்.

நான்காவது மாதத்திற்கான ஊசிப்போட வேண்டும் அதற்காக மருத்துவர் எழுதிக்கொடுக்க...

அவளுக்கு ஊசிப் போடுவதற்கு செவிலியால் முடியவில்லை, அழுதுக்கொண்டிருக்க இறுதியாக கதிரை உள்ளே அழைத்து விசயத்தைச் சொல்லவும்...

கதிர் சிரித்துவிட்டான் அதைப்பார்த்த நிலா அவனை முறைக்கவும், அவளைத் தன் நொஞ்சோடு அணைத்து வைத்துக்கொள்ள செவிலி ஊசியை செலுத்தியிருந்தனர்...

வலியில் அவளுக்கு கண்ணீர் வந்துவிட்டது... மெதுவாக அவளுக்கு தடவிவிட்டு, கண்ணீரைத் துடைத்துவிட்டவன், ஊசிக்கே இந்தப்பாடுனா பிரசவசமயத்துல எப்படித்தான் தாங்கிப்பாளோ என அன்பின் கணவனாக மனைவியைப் பற்றி யோசித்தான்...

வெளியே வந்தவன் நிலாவின் முகத்தைப் பார்த்தான் அவளும் அவனைத்தான் ஏறிட்டுப்பார்த்தாள்...

காரில் ஏறியதும் ரொம்ப நாளைக்குப்பின் தனதருகில் அமர்ந்தவளைத்தான் திரும்பிப் பார்த்தான்...

மெதுவாக கேட்டான் எப்படியும் லீவ் போட்டாச்சு, எங்கயாவதுப் போகலாமா என்றுக்கேட்டான், இப்பவும் அதேதான் கேட்டாள் கோயிலுக்குப் போகலாமா என்று, அவனும் தலையசைத்துக் கல்யாணம் முடிந்ததும் அழைத்துச் சென்ற அதே கோவிலுக்கு இப்பவும் வந்திருந்தனர்.

அன்றுப்போல இன்று கன்டிஷன் போடாமல் அவளுடன் கோவிலுக்குள் சென்றவன் அவளுடனே சேர்ந்து சாமியைக் கும்பிட, நிலா அவனைத்தான் தலையைச் சரித்துப்பார்த்தாள்.

கண்ணைத் திறந்தவன் அவளைப் பார்த்து சாமியைக் கும்பிடு என்று சைகைச் செய்தான்...

கண்ணைமூடி மனைவிக்காக வேண்டினான்... அவளது பிரசவம் சுலபமாக இருக்கவும்,அவர்களது வாழ்க்கை நல்லாயிருக்கவும் வேண்டினான்.

சாமித்தரிசனம் முடிந்து அமைதியாக அங்கயே வளாகத்தில் கொஞ்ச நேரமிருந்துவிட்டுக் கிளம்பினர்...

வர்ற வழியில் ஹோட்டலில் நிறுத்தி அவளுக்குப் பிடித்த பிரியாணி வரவழைத்து சாப்பிட்டு வீடு வருவதற்குள் அவனது தோளில் தலைசாய்த்து தூங்கியிருந்தாள்... இப்போதெல்லாம் தலைசுத்தல் குறைந்திருந்தது...ஆனாலும் அடிக்கடி சோர்வில் படுத்துவிடுவாள்...

இப்போதும் அப்படித்தான்...

வீட்டிற்கு வந்து சேர்ந்தும் அவளது தூக்கம் கலையவில்லை...அப்படியே அவளைத் தூக்கினான், அவளது கை யதேச்சையாகவே அவனது கழுத்தை சுற்றிப்பிடித்திருந்தது...

வீட்டிற்குள் வந்து கட்டிலில் கிடத்தியவன்,

அவள் இன்னும் கழுத்திலிருந்த கையைவிடவில்லை, இறுக்கமாக பிடித்திருந்தாள். அவனும் அவளோடுக் குனிந்து நெருங்கியிருந்தான்...

அவ்வளவு நெருக்கம் அவனுக்கு என்னவோ செய்ய அப்படியே அவளோடு நெருங்கிப் படுத்தேவிட்டான். தனது கரங்களைக் கொண்டு அப்படியே அவளது கன்னத்தை மெதுவாக தடவிக்கொடுக்க அந்த இதம் பிடித்தது போல அவள் இன்னும் அவனை நெருங்கினாள், தனது மீசையைக்கொண்டு கழுத்தில் தேய்க்க கண்ணைத்திறந்து லேசாக சிரித்தவள் மறுபடியும் கண்ணை மூடிக்கொண்டாள் அவனுகுப் புரிந்தது பாதி தூக்கத்திலிருக்காள் என்று...

தூக்கத்தை கலைக்க வேண்டாம் என்று எண்ணியவன் அப்படியே கட்டிலில் சரிந்துப் படுத்து அவளைத்தான் பார்த்திருந்தான்  

பாசம் வைத்தாலும் அந்த எல்லைக்குப்போறது, கோபம் வந்தாலும் இந்த எல்லைக்குப் போறது மொசக்குட்டி. கோபத்துல என்ன காரமா பேசுறா பச்சைமிளகாய் மாதிரி...நம்மள மட்டுமா எல்லாரையும் அன்பாலையும் ஆட்டிவைக்கிறது...

வம்புனாலையும் ஆட்டிவைக்கிறது...மெல்ல அவளது நெற்றயில் முத்தம் வைத்தவன். 

தனது தாய்க்கு அழைத்து மருத்துவமனைக்கு சென்று வந்ததை சொல்லிவிட்டு அவர் எப்போது இங்க வருவார் என்று கேட்க "அவரோ அதற்கு சரியான பதில் சொல்லாமல் வேறு பேச, அவனுக்குமே தெரியும் நிலா பேசியதும் நடந்துக்கிட்டதும் அம்மாவுக்கு பிடிக்கவில்லை, அவளிடமிருந்து இப்படியான குணத்தை எதிர்பார்க்கவில்லை அதனால்தான் இவ்வளவுக்கோபம்...எல்லாம் சரியாகணும்னு” நினைத்து போனை வைத்தான்.....

அத்தியாயம்-22

நிலா கதிரிடம் கொஞ்சமாக தேவைக்குப் பேச ஆரம்பித்திருந்தாள்...

இன்னும் மனசுவீட்டு அவனோட அளவளாவ விரும்பவில்லையோ என்னவோ ஒரு ஒதுக்கம் அவளிடமிருந்தது...

விளக்கில் ஒரு தடவைக் கைவைத்து சூட்டினை உணர்ந்தக் குழந்தை மறுபடியும் அதனிடம் போகாது...அந்த மனநிலையில் தான் இப்போதும் நிலாவும்.

தூரத்தில் நின்று ரசிக்கும் வான வேடிக்கையாக அவனை தள்ளியே நிறுத்தியிருந்தாள்.

அவனுக்கு அப்படியல்லவே...

தள்ளிவிட்டாலும் தன் மீது விழுந்துப்பிராண்டும் செல்ல மொசக்குட்டி 

இப்போது யாரோப்போல தள்ளி நிற்கும்போது மனது வலித்தது...

அவள் வேண்டும் அவளது அருகாமை வேண்டும், அவளது வாசனை வேண்டும் என்று மனது ஏங்கத்தொடங்கியது.

அவள் பக்கத்தில் வரவில்லையென்றால் நான் போகிறேன் என்று இறங்க இன்னும் கதிருக்கு பயிற்சிவேண்டுமோ...

மருத்துவமனை சம்பவத்திற்குப் பிறகு கல்லூரியில் பழையபடி இல்லையென்றாலும், கொஞ்சம் தனது இயல்பிற்குத் திரும்பியிருந்தாள்.

அதுவே அவள் மாறிவிடுவாள் என்ற நம்பிக்கை கதிருக்கு வந்திருந்தது...

காலையில் எழும்பி கல்லூரிக்கு கிளம்ப அவளுக்கு தாமதாமாகிவிட்டது என அவனிடம் துணியை எடுத்து வைக்கச்சொன்னவள், குளித்துமுடித்து வெளியே வந்துப் பார்க்க அவளோடது இல்லை...அங்கு கிளம்பிக்கொண்டிருந்தவனின் முன்பு வந்து நின்றவள், என்னோடத் துணிய எங்க என்றுக் கேட்க...எந்த துணி என்றுக் கேட்காதக் குறையாக முழித்துக்கொண்டிருந்தான்...

யோசித்து ஓஓ...அதுவா..அது நான் நீ சொன்ன கலர்ல தேடினேனா...அங்க அதேக் கலர்ல நிறைய இருந்துச்சா எதுனு கண்டுபிடிக்க முடியலை.. என நெற்றிச் சுருக்கியவனைப் பார்த்து...

இதுக்கூடத் தெரியலை இவருப் பெரிய லெக்ட்சரராம் என்று உதடு சுளித்தவளின் உதட்டினை தனது வாயால் மூடி அந்த சுளித்த இதழ்களை நீவிவிட்டான்...

அவனது கைகளோ அவளது மேனியில் தாராளமாக அலைந்தது. அவளது லேசான ஈரமான தேகத்தின் குழுமை அவனுள் இறங்கி அவனின் வெம்மையை தணித்தது...

மெதுவாக அவளை விடுவித்தவன்...

மெயின் மீல்ஸ்தான் கிடைக்கமாட்டுக்கு, அப்பப்போ கொஞ்சம் நொறுக்குத் தீனியாவது சாப்பட்டுக்கறனே என்று கண்ணடித்து அவளை விடுவித்தான்...

அவளும் அவனது அருகாமையில் லேசாக சிலிர்த்து ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக தயாராகினாள்...

கதிர் இன்னும் கொஞ்சநேரம் தொடர்ந்திருக்கலாமோ...கிடைத்த வாய்ப்பு போச்சே என்று நின்றிருந்தான்...( கதிர் மனது...ரொமான்ஸ்ல நீ இன்னும் வளருணும்டா...இரண்டு மாசமாச்சு பொண்டாட்டிய சமாதானப்படுத்தத் தெரியலை...குஷ்டம்டா உன்னால...)

தயாராகி கல்லூரிக்கு செல்லவும் நிலாவின் முகத்தில் இருந்த மலர்ச்சியைப் பார்த்து "என்ன சார் டோஸ் எதுவும் குடுத்தாரா ஹெவியா டோஸ்போல, முகத்துல பல்பு எரியுது" என்று இனியா கேட்கவும்...நிலா வெட்கச்சிரிப்பு சிரிக்க... சேஷாத்திரி சார்...நிலானி, இனியா அங்க என்னப் பேச்சு கிளாஸ் கவனிக்காமா என்று கேட்கவும் சரியாக இருந்தது...சாரி சார் என்று கோரஸாக சொல்லிவிட்டு இருவரும் கண்ணடித்துக் கொண்டனர்... 

சேஷாத்திரி ஸ்டாப் ரூமிற்குச் சென்றவர் கதிரிடம் வந்து சார் நிலா கொஞ்சநாள் அமைதியா இருந்தா இன்றைக்கு மறுபடியும் வகுப்பு கவனிக்கலை...பேசிட்டிருக்காங்க...என்றதும்..

கதிருக்கு தன்னாக அடக்கமாட்டமல் சிரிப்பு...மனைவி மறுபடியும் தன் சுயத்தை மீட்கின்றாள் என்று...

வாலு எனக்கு நல்லப்பேரை வாங்கித்தர்றா...இவளே இப்படினா என் பிள்ளைங்க எனக்கு எப்படிப் பேரு வாங்கித்தருவாங்களோ என நினைத்து புன்னகையோட அன்று முழுவதும் இருந்தான்...

பழைய கலகலப்பு இல்லையென்றாலும் விலகிப்போகாமல் இருந்தாள்...

ஐந்தாவது மாதம் தொடங்கியதும் ஜோதி வீட்டிற்கு வந்தவர் கதிரிடம் பேசினார் "நிலாவுக்கு ஐந்தாவது மாசத்துக்கு உண்டான சீர் செய்யனும் அண்ணிக்கிட்ட கேட்டுச்சொல்லுங்க" என்றதும்...

கதிர் உடனே சித்ராவிற்கு போனில் அழைத்து விசயத்தை சொல்லி என்ன செய்ய எனக்கேட்கவும், அவங்கப்பொண்ணுக்கு எப்படிவேணா செய்யச்சொல்லுடா, நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை... வளைக்காப்பிற்கு பெருசா செய்துக்கலாம் என்றுவிட்டார்...

ஜோதி முன்னாடி எதுவும் பேசவில்லை...

அத்தை அம்மா இப்போ சின்னதா செய்ய சொன்னாங்க...வளைக்காப்பிற்கு பெருசா பண்ணலாம்னு சொல்லிட்டாங்க...என்றதும்..

சரிங்க அம்மாகிட்ட தியதி மட்டும் கேட்டுச் சொல்லுங்க என்றதோடு நிறுத்திக்கொண்டார்..

தனதறைக்குச் சென்றவன் சித்ராவிற்கு போன் செய்து "அம்மா நீங்க இங்கவாங்களேன், நீங்க வந்தா நல்லாயிருக்கும்மா, நீங்க இல்லாமா எப்படிமா...எனக்குனு இருக்கறது நீங்கதான...”என்றதும் சித்ராவிற்கே ஒருமாதிரி ஆகிட்டு. 

அடுத்த நாள் கதிருக்கு அழைத்தார் சித்ரா " கதிருய்யா நான் அங்க வர்றேன் டிக்கட் போடுய்யா...”என்றதும்தான் கதிருக்கு சந்தோசம்.

காலையிலையே அம்மாவிடம் பேசியதும் அவர் இங்கே வர்றேன் என்று சொன்னதும்

ஐயாவிற்குத் ரொம்ப சந்தோசம்.

அப்படியே திரும்பி பார்க்க நிலா அவனைத்தான் பார்த்திருந்தாள்...

அவளைப் பிடித்து கட்டிலில் இருத்தியவன்...

கொஞ்சம் பேசணும் "அம்மா நாளைக்கு இங்க வர்றாங்க, உனக்கு ஐந்தாவது மாசம் எதோ சீர் பண்ணுவாங்களமே அதுக்கு கூப்பிட்டேன்"

நிலா " ஓஓ" 

கதிர் "என்ன ஓஓ..அப்பா இல்லாம, அவங்க மனசு எந்தளவு காயப்பட்டிருக்கும்னு யோசிச்சுப்பாரு...இரண்டும்பேரும் விரும்பிக் கல்யாணம் பண்ணவங்க கிட்டதட்ட முப்பது வருசத்துக்குமேல அன்றில்களா வாழ்ந்தவங்க"

அவனுக்குமே இதைச் சொல்லும்போது கண்கள் கலங்கியது அப்படியே சிறிது அமைதியாக இருந்தவன்...

"அவங்க வந்தா எனக்காக பொறுத்துக்கோ, எதுவும் திரும்ப பேசிடாத"

இதைக்கேட்டதும் தனது இடுப்பில் கை வைத்து அவனை முறைத்துக்கொண்டிருந்தாள்.

கதிர் என்ன என்று புருவம் உயர்த்த, என்னைப் பார்த்தா மாமியாரக் கொடுமைப் பண்ற மருமகள் மாதிரி இருக்கனா...நான் என்னக் கொடுமைக்காரியா...நீங்கதான் என்ன கொடூமை பண்ணுனீங்க...

இப்போ கதிர்தான் ஐயோ வம்பா வாயைக்கொடுத்துட்டமோ என்ற ரீதியில் நிற்க...

சரி சரி பொழைச்சிப்போங்க...ஐயோ பாவம்னு உங்களை சும்மாவிடுறேன்...

என்று கெத்துக் காண்பித்துவிட்டுப் போக...

கதிர் "பார்டா இந்தக் கதிர்கிட்டயே கெத்துக்காமிச்சிட்டுப் போறத"

அடுத்த நாள் கதிர் சித்ராவை அழைத்து வந்தவன் அவரிடமும் காரில் வைத்துப்பேசினான்...

உங்களுக்கு எங்க கல்யாணத்திற்கு முன்னாடியிலாம் நிலாவை அவ்வளவுப் பிடிக்கும்... அப்படிக் கொஞ்சுவீங்க...நிலாம்மா நிலாம்மானு...நீங்களும் மகனுக்கு கல்யாணம் முடிஞ்சவுடனே மாமியார் பதவியை ஏத்துக்கிட்டீங்களா...என்று சிரித்துக்கொண்டே கேட்க...

"இல்லய்யா, ஏற்கனவே கல்யாணம் முடிஞ்ச இரண்டாவது நாளே வாழ்க்கையே இல்லாம வந்து நின்ன...அதுவே எங்களுக்கு வேதனையா இருந்துச்சு, நிலா உன்னை நல்லப் பார்த்துப்பானு சந்தோசப்பட்டேன் அதுவும் பாதியில இப்படியாகவும், என்னடா என்பிள்ளைக்கு கல்யாண வாழ்க்கையே நிலைக்காதோனு வருத்தம் வந்திட்டு"

எனக்கு நீங்க இரண்டுபேரும் நீ நல்லபடியா வாழணும் அதுதான், வேறயெதுக்கு நிலாவைத் திட்டப்போறேன்...

கதிர் நெகிழ்ந்து அம்மாவின் கையை தனது இடதுக்கரத்தால் பிடித்திருந்தான்...

சித்ரா வீட்டினுள் வந்ததும், கதிர் நிலாவைத்தான் வர்றாளா என்றுப் பார்க்க, வரவில்லை என்றதும், அம்மா வந்தும் கீழவந்து வாங்க என்று சொன்னாக் குறைஞ்சுப் போயிடுவாளா என்றவன் அறைக்குள் சென்றுப்பார்க்க...

நல்லத் தூக்கத்தில் நிலா...

அவளுக்கு இப்போ விடுமுறை...தேர்வுகள் நெருங்குவதால். தூங்குறவளை எப்படி எழுப்ப என்று விட்டுவிட்டான்...அவன் மட்டுமே கல்லூரிக்குச் செல்லவேண்டும்...

கதிரோ அம்மாவிடம் சொல்லிவிட்டு கல்லூரிக்கு கிளம்பிவிட்டான்...நிலாவோ ஒரு பதினோரு மணிவாக்கில் எழும்பியவள் குளித்து முடித்து வெளியே வந்துப்பார்க்க சித்ரா அமர்ந்திருந்தார்..மெதுவாக வந்து

மெல்லியக்குரலில்" எப்படி இருக்கீங்க, எப்போ வந்தீங்க " என்றுக் கேட்கவும்...

"ம்ம்...நான் நல்லயிருக்கேன்,நீ எப்படியிருக்க, ஆஸ்பத்திரிலாம் போயிட்டு வந்தாச்சா ஊசிலாம் போட்டியா? என்க..

"ம்ம்..நல்லாயிருக்கேன்,ஹாஸ்பிட்டலுக்கு அடுத்தவாரம் போகணும்" அவ்வளவுதான் பேச்சு முடிந்ததென்று இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்...

இரண்டுப்பேருக்குள்ளும் மனதில் ஒரு உறுத்தல் இருந்தது எப்படி பேச என்று,சிறிது நேரமிருந்தவள் அமைதியாக எழும்பி சமயலறைக்கு வந்தவள் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு தனதறைக்குள் சென்று முடங்கிவிட்டாள்...

ஜோதி மாலையில் சித்ராவிற்கே அழைத்து என்ன செய்யனும் என்று கேட்டு தகவலைப் பெற்றுக்கொண்டார்...

அடுத்தநாள் காலையிலயே எல்லோரும் கீழே அமர்ந்திருக்க...நிலாவின் வீட்டிலிருந்து ஒரு வண்டி நிறைய ஆட்கள் வந்திருந்தனர்...

ஆமாம் ஐந்து வகை பழங்கள்,ஐந்து வகை பலகாரங்கள், ஐந்து வகையான சாப்பாடு, என்று எல்லாவற்றையும் சீராகக் கொண்டு வந்திருந்தனர்...அக்கம் பக்கத்திலிருந்தவர்களையும் அழைத்திருந்தார் சித்ரா.

எல்லாம் முடித்து சாப்பிட்டு குடும்பத்தினர் மட்டும் அமர்ந்திருந்தனர்...கதிருக்கு சந்தோசம் தனது பிள்ளைக்காக இதெல்லாம் என்றதும்.

ஜோதியின் மடியில் படுத்து நிலா எப்பவும்போல செல்லம் கொஞ்சிக்கொண்டிருக்க, சித்தார்த் நிலாவினைச் சீண்டிக்கொண்டிருந்தான்...

" எங்கம்மா மடியிலயிருந்து எழும்பு, அது என் பிள்ளைக்குனு ரிசர்வ் பண்ணிருக்கேன், உன் வீட்டுக்காரர் மடியிலப்போய் படுத்துக்கோ" என்க.

நிலாவிற்கு சின்னதாகக் கோபம்.. 

எனக்குத்தான் முதல்ல, அப்புறம் என் பிள்ளைங்களுக்கு...என்க.

சித்தார்த்"அதெப்படி ஏன் எனக்கும் என் பிள்ளைங்களுக்குத்தான், எங்கம்மா மடியிலப் படுத்துக்க முழு உரிமையும் உண்டு இல்லம்மா"

ஜோதியின் மடியிலிருந்து எழுந்தவள் போ, நான் என் மாம்ஸ் மடியிலப் படுத்துக்குறேன் நீயும் வேண்டாம் உங்கம்மாவும் வேண்டாம் போடா, என்று எழுந்துக் கதிரின் அருகில் போய் அமர்ந்துக்கொண்டாள்...

எல்லோரும் அவளது செய்கைப் பார்த்து சிரிக்கவும், கதிர் அவளின் தோள்மீது கைப்போட்டு தன்னோடு சேர்த்து இருத்திக்கொண்டான்...அவளாக கதிரிடம் வந்திருந்தாள்...அதுவே அவனுக்கு மனதிற்கு இதமாக இருந்தது.

இருக் குடும்பத்தினருக்குமே இப்போது கதிரையும் நிலாவையும் பார்த்து நிம்மதியாகினர்...

நிலாவின் குடும்பத்தாரும் சென்றுவிட்டனர்...

இப்போது கதிரும் நிலாவும் தங்களது அறையில், நிலாவின் கையைப் பிடித்துக்கொண்டிருந்த கதிர் அவளது கண்களைத்தான் பார்த்திருந்தான்...

நிலாவோ இப்போது அவனது பார்வையைத் தவிர்த்துக் குனிந்திருந்தாள்...

“இன்னும் என்மேல் உள்ளக் கோபம் போகலையா...நான் என்னப் செய்தாப் போகும்...இதுக்குமேல என் மனைவி மனசு வருத்தமாயிருந்தா அது சரியில்லை...சொல்லு...

நிலா ஒன்றுமே பேசவில்லை...எனக்கு மனைவிய நேசிக்கத்தெரியலை...நீ எனக்குச் சொல்லிக்குடு எப்படினு ...என்றதும் நிலா லேசாக சிரிக்கவும்...

நான் பேசறது உனக்கு சிரிப்பாயிருக்கா...என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது...ம்ம்...”என்று முறைக்க..

நிலா சத்தமாக சிரித்துவிட்டாள்... 

"ஊருக்கே பாடம் சொல்லிக்குடுக்குறவங்களுக்கு நான் லவ் பண்ண சொல்லிக்குடுக்கணுமா...சரிதான்” என்று படுத்துக் கொண்டாள்..

அவளதருகில் படுத்தவன் "இதுல என்னத் தப்பு... நான் உனக்கு தெரியாத நிறைய பாடம் சொல்லிக்குடுத்தேன்தான என்று கண்ணடித்தான் ...இப்போ எந்தக் எல்லையுமில்லாது எப்படிக் பொண்டாட்டிய காதலிக்கனும்னு எனக்குச் சொல்லிக்குடு...”

தலையில் கைவைத்துக்கொண்டவள் ...

" மனசுலயிருந்து இவள் என் மனைவி என்று காதல் இயல்பா வரணும் "

கதிர் "உனக்குத் தெரியாதுடி உங்கக்கா பிரச்சனையில் விரக்தியில் இருந்தவனுக்கு, உன்னோட நியபகந்தான் மனசுக்கு ஆறுதலா இருந்துச்சு, நீ சின்னப்பிள்ளைனு மனசுக்குள்ள ஆழமா எனக்கு நானே சொல்லிப்பேன்...அதுவே உங்கப்பா உங்கண்ணா இவங்களே நினைச்சாலே ஆத்திரம் வரும், அப்பவும் உன்னைத்தான்டி நினைச்சிப்பேன்...

இப்போ நிலா எழும்பி அவனருகில் அமர்ந்தாள்...

உன்னை முதல் நாள் கிளாஸ்ல பார்த்ததும் அப்படி ஒரு சந்தோசம்...ஆனாலும் மனசக்கட்டுப்படுத்திக்கிட்டேன்டி...

உன்னை பார்த்தாலே என்னோடக் கண்ட்ரோல் போயிடும்...அதுக்காகத்தான் பாதி நாளு உன்னை வெளியே அனுப்பியது...”

தன் முட்டைக்கண்ணை விரித்துப் பார்த்தாள்...

தன்னுடைய் போனை எடுத்துவந்து போல்டரை ஓப்பன் செய்து காண்பித்தான்

இந்தப் போட்டோஸைப் பாரு என்று ....

அவளது போட்டோக்கள் நிறைய வைத்திருந்தான்...அதுவும் கல்லூரி நாட்களில் எடுத்தது...

"நம்மக் கல்யாணம் முடிஞ்சு ஊருக்குப்போனப்போ அத்தை சொன்னாங்க..என் போட்டோ எதோ பார்த்ததா சொன்னாங்க"

“ஆமா...அப்பாக்கிட்ட ஒரு நாள் பேசிட்டு 

மறந்து வச்சிட்டேன்... எனக்குத்தெரியாமப் பார்த்திருக்காங்க...”என்று கதிர் சொல்லவும்...

அவனது தோளில் அடித்து கேடி இவ்வளவு ஆசையும் மனசுல வச்சிட்டு..என்னை வேண்டாம்னு சொல்லிருக்கீங்க...ம்ம்..உங்களை என்னச் செய்யலாம்..

" அது என்னவேணா செய்யலாம் மொசக்குட்டி,உன் இஷ்டம் என்று உதட்டைக் குவித்து முத்தம்" கொடுத்தவன்..பேசினான்

நான் சொன்னதும் சரிதான.. இப்போ பாரு எவ்வளவு பிரச்சனை நமக்குள்ள அதுக்குத்தான் மனசு சொன்னதக் கேட்காமல்...மூளை சொன்னதக்கேட்டு வேண்டாம்னு சொன்னேன்...யாருக்கேட்டா என் பேச்சை...

அப்பவும் என்னை எங்கவிட்ட கல்யாணம் பண்ணிகிட்டு...இப்படி உன்கிட்ட மண்டிப்போடுறளவு மாத்திட்ட என்றவன்..

அன்பே கொஞ்சம் காதல் கொடு...

என் ஆயுளுக்கும்...

உன்னை நேசிக்க..

என்றவன் அவளை தனது கைவளைவில் கொண்டுவந்திருந்தான்...

உன் காதல்தான்டி என்னை உயிர்ப்போடு வைத்திருக்கிறது என அவளது நெற்றியில் முத்தம் வைக்க, கண்கள் கிறங்க அவனைப் பார்க்க அவ்வளவுதான்...கதிரின் கையில் பாவையானாள்...

"மாம்ஸ்"

"மொசக்குட்டி"

அவ்வளவுதான் அவளது முகத்தினைக் கைகளில் ஏந்தி நெற்றியிலிருந்து தனது முத்தக் கணக்கை திரும்பவும் தொடங்கினான்...

மெதுவாக அவளின் மேல் படர்ந்தான்...அவள் பயத்தில்...ஐயோ வயிறு இடிக்கும்..பாப்பா ...என்க..

வயிறு இடிக்காமப் பாக்குறேன்... கத்தாதடி...என்றவன் சொன்னதைச் செயலில் காட்டினான்.

நிலாவின் கரங்கள் கணவனின் முடிக்குள்...நிலாவின் மேனியில் கதிரின் கரங்கள்...

ஊடலுக்குப்பின்னானக் காதலும் கூடலிலும் கதிரோ மதிமயங்கிப்போனான்,நிலாவோ தன் மனக்காயங்களை மெதுவாகத் ஆற்றிக்கொண்டிருந்தாள்...

அத்தியாயம்-23

காலையில் கண்விழித்தவள் எழும்புவதற்கு முயற்சி செய்ய முடியவில்லை, இறுக்கிப்பிடித்திருந்தான்...

ஹப்பா..தூக்கத்திலயும் பிடிவாதமா பிடிச்சி வச்சிருக்காங்க...எல்லாத்துலயும் பிடிவாதம் இந்த மீசைக்காரருக்கு... மீசையைப்பிடித்து இழுத்தாள்.

அவன் கைகளை விலக்கி எழும்ப முயற்சிக்க..ம்ஹூம்...மெதுவா மாம்ஸ்

என்க ...தூங்குடி ...ஆளில்லாத கடைக்கு நான் டீ ஆத்தப்போகலை...ஸ்டுடன்ட்ஸ் இல்ல அங்கப்போய் என்ன பண்றது...லீவ் போட்டுட்டேன்டி...தூங்கு என்றான்.

என்னது லீவா...மிஸ்டர் பெர்ஃபெக்ட் எப்படி இப்படி காரணமே இல்லாமால் லீவ் போட்டாங்க...என்று நிலா ஆச்சர்யப்பட..

கதிரோ "அதுவா ஒரு ஆட்டு வாலு என் வாழ்க்கையில் என்னைக்கு வந்தாளோ அன்னையில் இருந்து இந்த கதிர் இப்படித்தான் மாறிட்டான்...

இதைக்கேட்டு...என்னது ஆட்டுவாலா...நானா...என்ன மாம்ஸ்...”என்று சிணுங்கியவளை இழுத்து தனது கைக்குள்

கொண்டுவந்தவன் தூங்குடி...என்று செல்லி அவனும் கண்ணைமூடித்தூங்க ஆரம்பித்தான்...

சித்ரா அழைத்தப்பின்தான் இரண்டுபேரும் மெதுவாக எழும்பி குளித்து கீழே சென்றனர்...

சாப்பிடும்போதுதான் சித்ரா "கதிரய்யா நான் நாளைக்கு ஊருக்குப்போகலாம்னு இருக்கேன்யா...”

இதைக்கேட்டதும் கதிரின் முகமே மாறிட்டுது...நிலாவும் ஏன் என்றுதான் அவரைப் பார்த்திருந்தாள்...

இங்க இருந்து என்ன செய்ய, வீட்டுக்குள்ளவே இருக்கணும் அதுதான்

"நம்ம ஊருலவச்சு ஏழாவது மாசத்துல வளைக்காப்பு நடத்தலாம்னு நிலாவோட அம்மாக்கிட்டச் சொல்லிட்டேன்...

என் பிள்ளை அந்த ஊர்ல தலைகுனிந்து அவமானப்பட்டு நடந்தான்...அவங்க எல்லாரும் முன்னாடியும் பாருங்கய்யா என் பிள்ளையும் குடும்பம் குழந்தைனு வாழறான், சந்தோசமா சொல்லனும் அதுதான் என் ஆசை...உங்கப்பாதான் இந்த நல்லவிசயத்தை தெரிஞ்சிக்காமலயேப் போயிட்டாங்க” ... என்றவரின் கண்கள் ஈரமாகியது...

நிலா "பெரிய மாமாவுக்கு நான் கர்ப்பமாயிருக்க விசயம் தெரியும் " என்றதும் ...

கதிரும் சித்ராவும் அதிர்ச்சியாகவும் யோசனையாகவும் நிலாவைப் பார்க்க...

“அது மாமா ஹாஸ்பிட்டல்ல கடைசியாக இருக்கும்பேது நம்ம எல்லாரும் உள்ளப்போயிப் பார்த்தோம்தானே அப்பவே மாமாகிட்ட சொல்லிட்டேன்...அவங்க ஆசிர்வாதம் செய்தபிறகுதான்...” என்று நிறுத்தினாள்...

கதிருக்கு இப்போ அவங்கப்பாவே செவுட்டுல அறைந்து உணர்வு...எங்கப்பா இறக்கும்போதுக்கூட சந்தோசமா என்னைப்பற்றிய கவலையில்லாமல்தான் இறந்திருக்காங்க...என தகப்பனைப் பற்றிய 

சிந்தனையில் இருந்தவனை...நிலாதான் கலைத்தாள்...

மாம்ஸ் என்ன யோசனை என்று அவன் கையைப்பிடித்து உலுக்கினாள்...

கதிருக்கு நிலாவின் முகத்தைப் பார்க்கவே ஒருமாதிரி இருந்தது...சித்ராவோ சாகற வரைக்கும் வேதநாயகமும் நிலாவும் ஒருத்தொருக்கொருத்தர் எவ்வளவு பாசத்துல இருந்திருக்காங்க...நாமாதான் புரிஞ்சுக்காம...என்னென்ன பிரச்சனைய இழுத்துவிட்டிருக்கோம்..என்றுதான் வருத்தப்பட்டார்.

சாகும்போதுக்கூட இந்த மனுஷன் அவளை ஆசிர்வத்திச்சுட்டுப் போயிக்காரு...நான் அவள்மேல கொஞ்ச நாள்னாலும் கோபத்தைக் காண்பிச்சிட்டனே... என்றுதான் சிந்தனை...

அன்று தூங்கும்போது எழும்பி நிலாவையேப் பார்த்திருந்தான்...

உன்னைப்போய் எப்படி வேண்டாம்னு வெளியத் தள்ளினேன்...

அவளைத் படுக்கையிலயேத் தூக்கி அப்படி முத்தம் வைத்தான் கொஞ்ச நஞ்சமாக இருந்த கர்வமும் நிலா என்ற அன்பின் தேவதையின் காலடியில்...

தூக்கத்தில் முத்தமிட்டவுடன் எழும்பியவள் அவன் தூங்காம என்ன பண்றீங்க மாம்ஸ் என்று கேட்கவும்...ஒன்னுமில்ல மொசக்குட்டி...சும்மா என்று அவளது கழுத்தோடு சேரத்துக்கட்டிக்கொண்டுப் படுத்தான்...

காலையில் எழுந்ததும் கதிரை படுத்தி எடுத்துவிட்டாள்...

என் தூக்கத்தை கெடுதுட்டீங்க ...தூங்காம இப்போ எனக்கு வாந்திவருது... என்று...

சித்ரா ஊருக்குச் செல்லுவதற்காக கிளம்பினவர் கதிரிடம் சொல்லிவிட்டு நிலாவின் கன்னத்தை தடவிக்கொடுத்தவர் தலையாட்டி கிளம்பினார்...

இப்படியாக நாட்கள் நகர... வளைகாப்பு ஊரில் வைத்து நடத்தினர்...மணியரசுவிற்கு கதிர் நிலாவின் வாழ்க்கை நல்லவிதமாக மாறியதில் சந்தோசம்..

கதிரின் வாழ்க்கையை எள்ளியவர்களும் இப்போது வியந்துப் பார்க்கின்றளவிற்கு விழாவை நடத்திருந்தனர்...

எல்லாம் நல்லவிதமாக முடிந்ததும்...இப்பொழுது கதிர் பிடிவாதமாக " நீங்க எங்ககூடத்தான் இருக்கனும் இங்க வீட்டை யாருக்கிட்டயாவது சொல்லிப் பராமரிக்கலாம்...உங்களுக்கு ஊர் நியாபகம் வந்தாள் , வந்திட்டுப்போங்க.”

எனத் தன்னோடு அழைத்துக்கொண்டான்...

இப்போது தனதறையில் தனியாகப் படுத்துக்கொண்டு நிலாவிற்கு போனில் அழைத்தவன் " உன்னைப் பார்க்கணும்போல இருக்கு " என்றதும்...

ஏதோ பொண்டாட்டியாப் பார்த்து பலவருசம் ஆனமாதிரிய பேசறீங்க...சாயங்காலம் வரைக்கும் காலேஜ்லதான இருந்தேன்...பார்த்திட்டு இப்போ பார்க்கனும்போல இருக்கா...

அடியே...பார்க்கனும்போலனா... அந்தப் பார்க்கனும்போல புரியுதா...வாயேன் இங்கயே இருந்துக்கோ...பிரசவ சமயத்துல மட்டும்..உங்க அம்மா வீட்டிற்குப் போ.

அது எப்படி முடியும்...ஒன்னு செய்யலாம் நீங்க இங்க வாங்களேன்...நீங்க எங்க வீட்டிற்கு வர்றதில்லைனு அப்பாவுக்கும் அம்மாவிற்கும் வருத்தம் ...

அமைதியாக இருந்தான்...நிலா கணவனிடம் என்னைப் பார்க்ககூட வரமாட்டீங்களா? என்று ஏக்கமாகப் பேசவும்...அவளிடம் பேசிக்கொண்டே வெளியே வந்தவன்... 

" எனக்குத் தூக்கம் வருது நான் தூங்கப்போறேன்..." என போனை வைத்துவிட்டான்...

நிலாவிற்கோ தனது வயிற்றில் கைவைத்து "வர வர உங்கப்பாவுக்கு ரொம்ப கூடிப்போச்சுடா...நீ வந்துதான் அவங்கள ஓடவிடணும் பாரு...”என்று பேசியவள் அபபடியே படுத்துக்கொண்டாள்...

கொஞ்சநேரங்கழித்து தனது பக்கத்தில் யாரோ இருக்கற உணர்வு வர திரும்பிப்பார்த்தாள் கதிர்.

கண்ணு இரண்டும் நல்ல குண்டு பல்பு மாதிரி விரித்துப் பார்க்க...

"இது கனவில்லை நிஜம்"என்று சிரித்துக்கோண்டே சொல்ல ...அவசரமாக எழவும்...அவளைப் பிடித்துக் கொண்டான்...

அவனது முகத்தையே பார்த்திருந்தவளை நோக்கி... என்ன நான் எதுவும் வித்தியாசமா இருக்கனா...இப்படி பார்க்கற...எனக்கே வெட்கம் வருதுடி...என்று அவளது கட்டிலில் சரிந்து படுத்தான்...

நீங்க இங்கவருவீங்கனு எதிர்பார்க்கவேயில்லை...

இன்னும் பழைய விசயங்கள் மறக்கலையோனு நினைச்சேன்...

கதிர் இங்க வந்தா இனி பழச எதுவும் நியாபகம் வரக்கூடாதுனுதான் வந்தேன்...

அதுவுமில்லாமல் டெலிவரியாகிட்டுனா பிள்ளையைப் பார்க்க இங்கதான் வந்தாகனும்...

அந்த நேரத்துல நான் கூப்பிட்டப்போ வரலை...உங்க பிள்ளைன உடனே வர்றீங்கனு நீ அதுக்கும் சண்டைப்பிடிச்சா என்ன செய்ய...அதுதான் என்று சொல்லி சிரித்தான்...

நிலா " இருங்க குடிக்கதுக்கு எதாவது எடுத்துட்டு வர்றேன்" 

கதிர் " ஒன்னும் வேண்டாம் மாமியார் நல்லக் கவனிச்சுத்தான் மேலயே விட்டாங்க "...

அப்படியே இருவரும் கட்டிக்கொண்டிருக்க...நிலாதான் ரொம்ப நன்றி அப்பவுக்கும் அம்மாவுக்கும் நீங்க இங்கவரலைனு கொஞ்சம் வருத்தம்...அதுதான்...

"ஆமா ஆமா அவங்க விழுந்து விழுந்து கவனிச்சதுலயே நினைச்சேன்..." சரி சரி இவ்வளவுதூரம் வந்திருக்கேன் இந்த மாமானைக் கொஞ்சம் கவனிக்கறது...

நிலாவோ கவனிச்சிட்டாப் போச்சுது...என்றவள் அவனது கன்னத்தில் முத்தம் வைக்க, இது போதாது என்ன சின்னப்பிள்ளை மாதிரி இங்கத்தர்ற...

நிலா கதிரின் உதட்டில் தன் இதழை ஒற்றி எடுக்க...நீ சரிவரமாட்டடி என்று அவளது இதழ்களை தன்வாய்க்குள் கொண்டுவந்திருந்தான்...

அவனைத் தள்ளிவிட்டவள் மாம்ஸ் இது சரியில்லை...சும்மா இருங்க, இதுக்குத்தான் பார்க்கனும்போல இருக்குனுச் சொன்னீங்களா...

நாட்கள் படுவேகமாக செல்ல...ஒரு நாள் இரவு கதிருக்கு போனில் அழைப்பு வந்தது...நிலாவிற்கு நிறைமாதமென்பதால் எப்போதும் விழிப்புடன்தான் இருந்தான்...

அழைத்தது சித்தார்த் என்றதும் பதறிக்கேட்க...நிலாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகவும் கதிரை அங்கு வருமாறு சொன்னான்.

எப்படி வந்து சேர்ந்தான் என்றுத் தெரியாது மனைவியைத் தேடி ஓடிவந்திருந்தான்.

நிலாவோ வலி தாளாது அழுது அழுது முகமெல்லாம் வீங்கியகருந்தது, ஜோதி அவளதருகில் முதுகை நீவிவிட்டுக்கொண்டிருந்தார்.

கதிரைக்கண்டதும்தான் அடக்கிவைத்த அழுகையை மீண்டும் தொடங்கிவிட்டாள்...

நிலாவைவிட இப்போது அதிகமாகப் பயந்தது கதிர்தான்...வலி தாங்குவாளா ...எப்படி சமாளிப்பா என்று ...

கதிர் தன் அம்மவிற்கு அழைத்துச் சொல்லிவிட்டான்.

மருத்துவர்கள் நிலாவை நடக்கச் சொல்ல... 

அவளோடுச் சேர்த்து கதிரும் நடந்தான்...இரவு முழுவதும் எல்லோரையும் படுத்தி எடுத்துவிட்டாள்...

கதிர் நினைத்தான் ஐயோ இந்த ஒரு குழந்தையே போதும்டா சாமி என்று( இதை நிலா சொல்லனும் ...மாத்தி கதிரு நீ சொல்ற...)

அடுத்தா நாள் எல்லோருக்கும் நல்ல நாளகவே விடிந்தது குறிப்பாக கதிருக்கம் நிலாவிற்கும்... ஒரு வழியாக நிலாவை படுத்தி எடுத்து இந்த உலகத்திற்கு வந்தான் கதிர் நிலாவின் மகன்...

செவிலி பிள்ளையைக் கொண்டுவந்துக் கொடுக்க கதிர் நடுங்கும் கைகளில் தனது மகனை முதன் முறையாகப் பார்க்கும்போது பூரிப்பு சந்தோசம், தனது தந்தையே தனக்கு மகனாகப் பிறந்திருக்கிறார் என்று ஆனந்தக் கண்ணீர் என்று எல்லாவிதமான கலவையான உணர்வுகளையும் உணர்ந்தான்...

அவன் கையிலிருந்த பிள்ளையைத் தொட்டுப் பார்த்தனர் அனவரும்...அவனோ பூப்பந்தாக நெளிந்துக்கொடுக்க கதிருக்கு தன் மகனை திரும்ப செவிலியிடாம் கொடுக்க மனதேயில்லை...

கிட்டதட்ட மகன் பிறந்து ஒரு மூன்று மணிநேரம் கழித்தே அறைக்கு நிலாவையும் பிளாளையையும் கொண்டுவந்திருந்தனர்.

முதலில் எல்லோரும் அவர்களை பார்த்துவிட்டு வெளியே வர கதிர் கடைசியாகச் சென்று அவளது அருகில் அமர்ந்தவன் மனையாளின் நெற்றியில் முத்தமிட கண்விழித்துப் பார்த்தவள் சோபையாக சிரிக்க நெற்றியில் முத்தம் வைத்தான்...

சைகையினாலயேக் கேட்டாள் பிள்ளையைப் பார்த்தீங்களா எப்படி இருக்கான்...எனக்கு பக்கத்தில் அவனை எடுத்து படுக்க வைங்க என்று...

தொட்டிலில் இருக்கும் பிள்ளையைத் தூக்குவதற்கு அவன் பயந்து கைகள் நடுங்க அதைப்பார்த்தவள் சிரித்தாள்.

பயமாருக்குடி...நான் அத்தையைக் கூப்பிடுறேன் என்று ஜோதியை அழைத்து சொல்லவும், அவர் குழந்தையை லாவகமாகத் தூக்கி நிலாவின் அருகே படுக்கவைத்தார்...தனது கைகளால் அணைக்கொடுத்துப் பிடித்துக்கொண்டாள்..

எல்லோரும் வெளியே இருக்கவும் சிறிது நேரத்தில் மகன் பசியில் அழ ஆரம்பித்தான்...அவன் போட்ட சத்தத்தில் கதிர் அரண்டுவிட்டான்...என்ன இப்படி அழறான் என்று...

மதியத்திற்கு மேல் சித்ராவும் மணியரசும் வந்திருந்தனர். குழந்தையை எடுத்துக் கையில் வைத்தவர் கைகால்களைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தார்...

தனது கணவனே பேரனாகப் பிறந்துவிட்டார் என்று தோன்றியது அவருக்கு...

மூன்று நாட்கள் கழித்து நிலாவையும் குழந்தையையும் தாய்வீட்டிற்கு அழைத்து செல்ல...கதிருக்கோ அவர்களுடனே சென்றுவிடுவோமா என்ற நிலை...மனைவியையும் மகனையும் இப்பவே தனது வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுவோமா என்றும் நினைத்தான் 

இருக் குடும்பத்தையும் இணைக்கவந்தவன் கதிர் நிலாவின் மகன். பழைய விசயங்களை கழைந்து இப்போது இரு குடும்பத்தாரும் குழந்தை விசயத்தில் ஒன்றாக இருந்தனர்...

தினமும் மகனைப் பார்க்க மாமியார் வீட்டிற்கு சென்று, மகனோடு சிறிது நேரம் இருந்துவிட்டு வருவான்..

நாட்கள் நகர ஒரு மாதம் முடிந்த நிலையில் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா வைக்க ஆலோசித்தனர்...நிலாவின் உடம்புத் தேறுவதற்கே நாட்கள் பிடித்தன...

வீட்டிலயே விழாவினை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு எடுத்து தென்னவன் வீட்டிற்கு முன் எல்லா ஏற்பாடும் செய்யப்பட்டது... 

பேயராசூட்டுவதற்கு நிலா கதிரிடம் கேட்டாள்... பெயர் எதுவும் எடுத்து வச்சிருக்கீங்களா என்று அவனும் ஆமா நான் பெயர் எடுத்து வச்சிருக்கேன், அது உனக்குப் பிடிக்குதாப் பாரு என்க அந்தப் பெயர் அவளுக்கு ரொம்பவும் பிடிச்சிருந்தது...

விழாவிற்கு எல்லாரும் வர நிலாவின் தோழி இனியாவும் வந்திருந்தாள்...

நிலாவின் அருகில் அமர்ந்திருந்தவளை எதோ நிலாவிடம் கேட்கவந்த சித்தார்த் பார்த்தவன்...

இதுயாருடா புதுசாயிருக்கு நிலா பக்கத்துல...என்று நினைத்தவன் இப்போ எதுவும் கேட்கமுடியாது என்று விட்டுவிட்டான்.

நிலாவும் கதிரும் மகனின் காதில் பெயரை மூன்று முறை சத்தமாக 

"வேதவிகாஷ்" என்று... அழைத்து தொட்டிலில் போடவும்...

சித்ரா நெகிழ்ந்தேப் போனார்...

எல்லாருக்குமே அந்த பெயர் பிடித்திருந்தது...

இனியா சாப்பிடுவதற்கு செல்ல சித்தார்த் மறித்து... உங்க பெரென்ன என்றுக் கேட்க...நிலாவின் அண்ணன் என்று அவளுக்குத்தெரியும்...அவனுக்குத்தான் ஆவள் யாரென்றுத் தெரியாது...

" மகாகாளி வள்ளியம்மை" என்றாள்...

சித்தார்த் "என்னது" என்று அதிர்ந்தவன் ...

அவளை அனுப்பிவிட்டு...ஆளுக்கும் பேருக்கும் சம்பந்தமேயில்லையே என்றுதான் யோசித்துக்கொண்டே சென்றான்...

இனியாவிற்கோ சிரிப்பு..யாருக்கிட்ட எங்ககிட்டயேவா..என்று சென்றுவிட்டாள்...

விருந்து எல்லாம் முடித்து அனைவரும் கலந்துப் பேசினர். நிலாவை எப்போது அழைத்துக்கொண்டுச் சொல்லவென்று...

ஜோதி தீர்மானமாக சொல்லிவிட்டார்...இன்னும் இரண்டு மாசம் இங்க இருக்கட்டும்...அப்புறம் மருமகனுக்கும் லீவு இருக்கும் அப்போ கொண்டு விடுறோம் என்று...

கதிர் நிலாவைத்தான் பார்த்தான்...நான் என்ன செய்யமுடியும் என்று பதிலுக்கு அவளும் பார்க்க...பெரியவர்கள் எல்லோரும் அவர்களைப் பார்க்க...நிலாவோ அம்மா சொல்ற மாதிரியே இன்னும் இரண்டு மாசம் இங்கயே இருக்கேன் என்று முடித்துவிட்டாள்...

சித்ரவிற்கோ குழந்தையைவிட்டு அசையக்கூட மனதில்லை வேற வழி...கதிரும் சித்ராவும் வீட்டிற்கு கிளம்பினர்.

வீட்டிற்குப்போய்ச் சேர்ந்தும் நிலாவிற்கு கதிர் அழைக்கவில்லை...நிலா அழைக்க அழைப்பை எடுக்கப்படவில்லை...திரும்ப அழைக்க அவன் போனை எடுத்து பேசாமல் இருந்தான்...

" ஹலோ இந்தப்பக்கம் நிலா அந்தப்பக்கம் மீசைக்கார மாமாங்களா" என்றுக் கேட்டதும்...

சிரித்தவன் ஏன்டி வரமாட்டேன்னு சொன்ன...நம்மவீட்டைவிட உனக்கு அங்க இருக்கத்தான் பிடிச்சிருக்கா என்ன?

"யோசிக்கம பேசாதிங்க...இன்னும் எனக்கு உடம்பு சரியாகலை...அதைவிட இப்போ நான் அங்கவந்தா மாமா கையும்காலும் சும்மாவா இருக்கும்...மருமகனைப் பத்தி தெரிஞ்சதுனாலதான்... அம்மா இன்னும் நாள் கேட்டாங்க"...

அப்படி என்னடி செயதிருவேன் உன்னை என்று கோபத்தில் கேட்க...

ம்ம் அடுத்த பத்தாவது மாசத்துல வேதாக்கு தம்பியயோ தங்கையோ பெறந்திரும்னு பயம் போதுமா..

கதிருக்கு அடக்கமாட்டாமல் சிரிப்பு...இந்த மாமாவோட பெர்மான்ஸ் அப்படிடி..என்க...

நிலாவோ...ரொம்பத்தான்...ஓவர் கான்பிடன்ஸ் மாம்ஸக்கு என்று ஒன்றுமில்லாமலயே இரண்டு மணிநேரம் கணவனும் மனைவியும் பேசியிருந்தனர்...

தினமும் கேட்பான் எப்படி வருவ சீக்கிரம் வா..குட்டிபையனக் கூடவே வச்சுக்கணும்போல இருக்குடி...இதே பல்லவியை மூன்று மாதமாக பாடினான்..

இடையில் தனது பரீட்சை எழுதுவதற்கும் சென்று வந்தாள்...யார் சொல்லியும் கேட்கவில்லை...இதுதான் கடைசி பரீட்சை முடிச்சுடுறேன் என்றவள் தனது படிப்பையும் முடித்திருந்தாள்..

மூன்று மாதம் முடிந்ததும் ஒரு நல்லநாளில் தனது வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான். சித்ராவும் நிலா இங்கேயில்லாத சமயத்தில் கதிருக்காக இங்கயே இருந்தவர் இப்போது பேரனைப் பார்த்ததும்...இங்கயே இருக்க முடிவு செய்து கதிரிடம் பேசிவிட்டார்.

நிலா சிலநேரம் மகனை சமாளிக்க முடியாமல் "அத்தை உங்கபேரனைக் கொஞ்சம் பார்த்துக்கோங்க என்று அவரதுக் கையில் குடுத்துவிடுவாள்"

நிலா இப்போது சித்ராவிடம் தானாகவே பேச ஆரம்பித்திருந்தாள், மறக்கவில்லைனாலும் மன்னிக்கத் தெரியும் நிலாவிற்கு...

அதுதான் அவளது வாழ்வில் கதிரினை இணைக்க காரணமாக இருந்தது....

அத்தியாயம்-24

இரண்டு வருடம் கடந்து இருந்த நிலையில் கதிரின் மகன் வளர்ந்திருந்தான்.. ஒரு நிலாவையே கதிரால் சமாளிக்க இயலவில்லை.. இப்போதோ இரண்டு நிலாவிற்கு சமம் அவளது மகன் வேதா...

மகனின் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதான் இருந்தது

என்னதான் சத்தம்போட்டு அதட்டி வைத்தாலும் அடுத்த சில நிமிடங்களில் திரும்பவும் சேட்டை செய்ய ஆரம்பித்துவிடுவான்...

சித்ராவிற்கு பேரனின் சேட்டைகளை காண்பது கற்கண்டு உண்டதைப் போன்ற உணர்வைத் கொடுக்கும், அதனால் ரசித்து சிரித்திருப்பார்...

நிலாவின் வீட்டிலும் வேதாவிற்கு அதிகச் செல்லம்...அதுவும் எல்லாரையும் மிரட்டும் தென்னவனையே இவன் மிரட்டுவான்.

ஆகமொத்தம் நிலாவிற்கும் வேதாவிற்கும் இடையில் மாட்டிக்கொண்டு முழிப்பது கதிரின் நிலையாயிற்று. 

இப்போது கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருக்கும் கதிரின் முன் வந்து நின்றாள் நிலாவோ "நான் கேட்டதுக்கு நீங்க பதிலே சொல்லல மாம்ஸ்” என்று நின்றாள்...

கதிரோ "என்ன கேட்ட நீ " கேட்க... மனையாளோ அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

என்னுடைய பி.எச்.டி விஷயமா சொல்லியிருந்தேன் அது மறந்துட்டீங்களா?

அது சரி வராது என்று கதிர் சொல்லவும் 

நிலாவோ "ஏன் சரிவராது? ஏன்? ஏன்? என்று 

கையை விரித்துக் கதிரின் முன்னாடி கேள்வி கேட்க

அவளது கையை பிடித்து இழுத்தவன் கேட்டான்..எதுக்கு இத்தனை ஏன் போடுற..சரி வராதுனு சொன்னாக் கேட்கணும்.

நிலா இப்பொழுது அமைதியாக நின்றாள்

"நீ எம்எஸ்சி படிக்கும்போதே உன்னை என்னால சமாளிக்க முடியல ரெண்டு வருஷம் என்னை பாடா படுத்தி... எவ்வளவு சேட்டை பண்ணின..

மறுபடியும் பிஎச்டி அந்த காலேஜ்ல படித்தனா கண்டிப்பா என்னால சமாளிக்க முடியாது... அதனால எனக்கு தெரிஞ்ச வேற ஏதாவது காலேஜ்ல உனக்கு சீட்டு வாங்கி தரேன் சரியா...

அங்கேயும் போய் எந்த சேட்டையும் பண்ணாம என் பெயரைக் கெடுக்காமல் ஒழுங்கா படிச்சு வெளிய வரதா இருந்தா சீட்டு வாங்கி தரேன்"

கதிர் திரும்பவும் அழுத்தமாக கேட்டான் என்ன சரியா ஒழுங்கா இருப்பியா எனக் கேட்க...

"மாம்ஸ் நம்ம காலேஜ்லயே பண்றனே..ப்ளீஸ் ப்ளீஸ்” என்க...

இல்லமா அங்க எனக்கு கீழ பி.எச்.டி பண்ணாலும் பிரச்சனை வரும்...சரியா அதனால வேற பார்க்கலாம் என்றான்...எனக்குத் தெரிந்த கல்லூரியில படி...மறுபடியும் சொல்றேன் சேட்டை செய்தனா அனுப்பமாட்டேன்..சரியா?

நிலவோ எந்த பக்கம் தலை ஆட்டுவது என்று தெரியாமல் எல்லா பக்கமும் தலையை ஆட்டி வைத்தாள்...

அவளைத் தன்னருகே இழுத்து வாசம்பிடித்தான்...அந்த ஒற்றை மூக்குத்தியில் முத்தம் வைத்தான்...

நீ தலையாட்டுறதே சரி இல்ல எதுக்கு.. இப்போ பிஎச்டி பண்ற வேறு ஏதாவது படிக்கலாமே?

நிலாவோ "முடியாது முடியாது நானும் ஏதாவது ஸ்டேட்டஸ முடிக்கணும் எதுக்காக மெடிக்கலில் வேண்டாம்னு விட்டேன் இப்போ எனக்குனு ஒரு இடத்தை பிடிக்கணும் ப்ளீஸ் மாம்ஸ்" என்றாள்.

இதைக்கேட்டதும் கதிரோ மனையாளை இன்னும் நெருங்கி நின்று அவளை வாசம் பிடித்தான் அவனது சட்டையை பிடித்து பிடித்து இழுத்து கட்டிக்கொண்டாள்..

எவ்வளவு வாசமா இருக்க..என தனது முகத்தை அவளது உடை மறக்காது தோளில் வைத்து தேய்க்க அவளுக்கோ மோன நிலை அவனது மீசை செய்யும் குறுகுறுப்பில் நெளிந்தவளை...தன் ஒற்றைவிரலால் அவளது நிடியை பிடித்து நிமிர்த்தியவன்... அந்த ஒற்றைக் கல் மூக்குத்தியில் முத்தமிட்டான்

என்றைக்கோ தனக்குப் பிடிக்கும் என்று சொன்னதை மனதில் வைத்து அவளது ரசனைகளையே மாற்றி இருந்தாள்.. தனது மருத்துவ படிப்பை விட்டுவிட்டு அவனுக்காக வந்திருந்தாள்... எவ்வளவு காதல் என் மேல்...என்று அதிசயித்தான்..

இப்போது அவளது இதழின் வரிகளை தனது கரங்களால் எண்ணியவன்.. அந்த தேனின் மினுமினுக்கும் உதட்டினை பார்த்து மயங்கி தன் நாவினால் தொட்டு உரசி வண்டன உரிந்து எடுத்தான்...

கதிரும் நிலாவும் ஒட்டிக்கொண்டு நிற்க கதிரின் காலில் ஏதோ உணர குனிந்து பார்த்தால் அவளது மகன் வேதா நின்றிருந்தான்...காலைக் கட்டிக்கொண்டு நின்றான்...

சட்டென்று இருவரும் விலகி நிற்கவும்,கதிர் மகனை தூக்கியவன்.. அடுத்த வாலு எப்படிடி உன்னை மாதிரியே நகலா பெத்து வச்சிருக்க... உருவத்தில் மட்டும் என்ன மாதிரி என்று பேசியவன் நொடிக்கு ஒரு முத்தம் வைத்தான்

மகனுக்கு...வேதாவோ ஒரு படி மேல் தகப்பன் வைத்த ஒவ்வொரு முத்தத்திற்கும் திரும்ப முகத்தில் முத்தம் வைக்கிறேன் என்று கடித்து வைத்திருந்தான்...

கல்லூரிக்கு நேரமாயிற்று என்று கிளம்ப போனவன் தன்னுடைய சட்டையைப் பார்க்க அது சுருங்கி இருந்தது அதை பார்த்த நிலாவோ தன் முகத்தை... சுருக்கி சாரி மாம்ஸ் வேற போட்டுட்டு போங்க என்று சட்டை எடுத்துக்கொடுக்க அதை மாற்றிக் கொண்டு கீழே இறங்கினான் கதிர்.

தனது காலை உணவை முடித்தவன், தன் அம்மாவிடம் சொல்லிக் கொண்டு வெளியே வர அவளது மகன் வேதாவும் அவனை கட்டிக்கொண்டு போக விடாமல் தடுத்துக் கொண்டிருந்தான்...

இதுதான் நடக்கும் தினமும். தனது காரில் வைத்து கொஞ்ச தூரம் சென்றபின் தான் இறங்கி வருவான்...இது தினமும் வாடிக்கையே... 

இன்றும் அதுபோல் காரில் வைத்து.. இறக்கி விட்டு விட்டு கல்லூரிக்கு சென்றான்..

மகனைத் தூக்கிக் கொண்டு உள்ளே வரவும் சித்ரா சமையலறையில் பேரனுக்காக சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்...

நிலா சாப்பாடு கொடுத்தாள் என்றாள்... அவளை ஒரு வழியாக்கி விடுவானா சித்ராவிற்கு அந்த பொறுமை இருப்பதால் அவனை சுலபமாக கையாண்டு சாப்பாடு கொடுத்து விடுவார் அவரின் கையில் சமத்தாக இருப்பான்.

சித்ரா பேரனுக்குச் சாப்பாடு ஊட்டிக் கொண்டிருக்க... நிலாவிற்கு இப்போது போனில் அழைப்பு வந்தது அழைப்பை எடுத்து பேச அந்தப்பக்கம் ஜோதி பேசினார் "கிளம்பிட்டியா எப்ப வருவ" என்று

இப்போ நான் கிளம்பி தான் இருக்கேன்...வேதாவிற்கு சாப்பாடு கொடுத்துவிட்டு இருக்காங்க.. இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துருவேன் என்றாள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் நிலாவும் வேதாவும் தனது தாய் வீட்டில் இருந்தனர், அங்கு தென்னவன் சித்ரா சித்தார்த் மூன்று பேருமே தயாராக இருந்தனர்.

வேறொன்றுமில்லை சித்தார்த் இருக்கும் பெண் பார்க்கச் செல்கின்றனர் அதற்காக நிலா வந்திருந்தாள்.

ஏற்கனவே இரண்டு மூன்று வாரங்கள் தட்டி போய்விட இப்போது இவர்கள் மட்டுமே செல்கின்றன.

பெண் வீட்டிற்கு சென்று இறங்க அங்குள்ளவர்களின் முகத்தை பார்த்து, நிலா உணர்ந்தாள் ஏதோ வித்தியாசமாக இருக்கிறது என்று

பெண்ணைப் பார்க்க இவர்கள் காத்திருக்க...பெண்ணை அவர்கள் அழைத்த பாடில்லை...என்வென்று பார்க்க அவர்களுக்கு நித்யாவின் விஷயம் தெரிந்திருந்தது. பெண்ணின் அப்பா நேரடியாகவே சொல்லிவிட்டார் எங்களுக்குப் பெண் தர விருப்பமில்லை...

நிலா பெண்வீட்டாரிடம் கேட்டாள், இது நாங்க வரதுக்கு முன்னாடியே சொல்லிருக்கலாமே?

எங்களுக்கே இப்போதுதான் தகவல் வந்தது என்றனர்.

அவர்கள் குடும்பத்திற்கு பெருத்த தலைகுனிவாகப் போயிற்று கிளம்பி வீட்டிற்கு வரவும் ஜோதி ஒரே அழுகை. ஒருத்தி செய்த தப்புக்கு மீதி இருந்த இரண்டு பிள்ளைகளின் வாழ்க்கையும் பிரச்சனையாக விடியுது ...இப்படி செய்திட்டுப் போயிட்டாலே.. இன்னும் எத்தனை நாளைக்கு இந்த பேச்சை கேட்கணும் அவ நல்லாவே இருக்க மாட்டா..என்று வேதனைப்பட்டார்.

செத்தும் கெடுத்தான் சீதக்காதி கதை தான் அவள் உறவே வேண்டாம் என்று ஒதுக்கி வச்சாலும் பிரச்சனை தானாக தேடி வருது என்று திரும்ப திரும்ப மருகினார்...

மாலையில் தங்கையும் மருமகனையும் வீட்டிற்கு கொண்டு விட வந்த சித்தார்த்தின் முகத்தை படித்தான் கதிர்

"சித்தார்த் வாங்க.. மொட்டை மாடிக்கு போவோம் அங்க நல்ல காத்து கிடைக்கும்...உங்க தங்கைக்கு வேற ஊஞ்சல் போட்டு வச்சிருக்கேன்” என்று அவனை மேலே அழைத்து சென்றான்.

அவனது முகம் தெளிவில்லாமல் இருந்தது...

"என்ன பிரச்சினை சித்தார்த்...ஏன் இப்படி இருக்கீங்க” என்று கதிரவன் கேட்க பொண்ணு வீட்டில் நடந்த அத்தனை விஷயங்களையும் சொல்லியிருந்தான்...

பயப்படாதீங்க மச்சான் எல்லாம் சரியாகும்... எப்படியும் உங்களுக்கு பொண்ணு கிடைக்கும் வேணா ஒன்னு பண்ணுங்களேன்... லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கோங்க... அதுதான் உங்களுக்கு சரியாக வரும் எனறதும்..

சித்தார்த் அதிர்ச்சியாக கதிரை பார்க்க ...என்ன கதிரத்தான் இப்படி மாறிட்டீங்க...

அந்த மதுரைக்கார...விறைப்பான மீசைக்காரர் காணம போயிட்டாரே என்று சித்தார் பொய்யாய் சோகமுகம் காட்ட...

அதுவா உன் தங்கச்சி கிட்ட குடும்பம் நடத்தினா இன்னும் பலவித ஐடியாக்கள் வருமென்று கதிர் சொல்லவும் சித்தார்த் மலர்ந்து சிரித்தான்...

" ரொம்ப சிரிக்காதா பாரு உன் குடுமியபிடிச்சு ஆட்டவும் ஒருத்தி வருவாப் பாரு...அப்போ நானும் கேட்பேன் எங்கடா எங்க சித்தார்த் மச்சானக் காணோம்னு...”

அவர்கள் பேசிக்கொண்டிருக்க நிலா மேல வந்தாள்...

வந்தவள் சித்தார்த்தின் அருகில் வந்து நின்று கஷ்டமா இருக்காண்ணா...

நீ ஒன்னும் வருதாதப்படாத...நீ ஒரு தப்பும் செய்யலை அப்புறமெதுக்கு வேதனைப்படுற...இதுவும் நல்லதுக்குனு நினைச்சிக்கோ...உன்னை நல்ல புரிஞ்சிகிட்டப்பொண்ணு கிடைப்பாள்...

அவளது தலையைபப்பிடித்து ஆட்டினவன்...நான் எதுவும் நினைக்கலை...

அம்மாவை நினைச்சித்தான் ஒரு மாதிரி இருக்கு...இன்னும் ஒருவாரம் புலம்புவாங்க...அவளை திட்டிட்டே இருப்பாங்க...

கதிர் விடுங்க மச்சான் எல்லாம் சரியாகும்...

என்று இருவரும் அவனைத்தேற்றி சாப்பிட வைத்து அனுப்பினர்...

ஒரு பெண்ணை சரியாக வளர்க்காமல் விட்டதின் பலன் குடும்பத்தில் இருக்கும் மற்ற பிள்ளைகள் அனுபவிக்கின்றனர்...

பெற்றவர்கள் செய்யும் நல்லதைப் புரிந்துக்கொள்ளாமல்...பிள்ளைகள் செய்கின்ற செயல் ..ஒட்டுமொத்தக் குடும்பமும் பாதிப்படைந்தது..

நித்யாவோ தனது வீட்டில் கணவனின் முன்பு அழுதுக்கொண்டிருந்தாள், ஜோதிக் கொடுத்த நகையையும் வாங்கிக்கொண்டான்...இப்பொது வேலைக்கு செல்வதால் முதல் குழந்தையை மாமியார் பார்த்திக்கிட்டாலும், அடுத்தக் குழந்தை வேண்டாமென்று அவளது கணவன் தாய் சொல்லைக்கேட்டு இரண்டாவதுக் குழந்தையை வயிற்றிலயே கலைத்துவிட்டு வந்தாகிற்று...

அதற்கான கவனிப்பும் கிடையாது...கழுத்தில் வெறும் தாலிமட்டும்தான் போட்டிருந்தாள்...

அன்பாக பேசக்கூட ஆளில்லை...இப்போது செய்த தப்பை நினைத்து நினைத்து அழுதாலும் வசதியான வாழ்க்கை வாழமுடியவில்லையே என்று ஏக்கம்தான் அதிகமாக இருந்தது...கண் கெட்டப்பிறகு சூரியநமஷ்காரமா...

ஜோதிவேறு அவளை இன்று வெளியில் கடையில் வைத்துப் பார்த்துவிட்டு திட்டிவிட்டுப் போய்விட்டார்...உன்னால் நாங்க இன்னும் என்னவெல்லாம் கேவலப்பட வேண்டியதிருக்கோ என்று...

அவரவரவர் செய்த செயலுக்கான பலன் கிடைத்தேயாகும்...

இங்கு நிலாவோ கட்டிலில் புரண்டு சேட்டை செய்யும் மகனை தூங்க வைக்க முயல...தூங்காமல் தகப்பனின் நெஞ்சில் ஏறிப்படுத்துக் கொண்டான்...

"மாம்ஸ் அவனை விடுங்க, எனக்கு தூக்கம் வருது...அவனைத் தூங்க வைக்கணூம்...நீங்க ரொம்ப செல்லம் கொஞ்சுரீங்க...அதுதான் என்கிட்ட வரமாட்டுக்கான்" நிலா கோபமாக மகனை தூக்கி தூங்கவைக்க முயற்சி செய்தாள்...

சிறிது நேரங்கழித்து நிலாவின் இடுப்பினூடே கைகள் நகர, சட்டென்று பிடித்தவள், லேசாகத் தலையைத் திரும்பிப் பார்க்க, கணவனது கண்களில் காதல் வழிய பார்த்துக்கொண்டிருந்தான்...அதற்குள் மகன் தூங்கியிருந்தான்...

நிலா மெதுவாக வேதாவை எடுத்து தொட்டிலில் போட்டுவிட்டு, அவன் நல்லத்தூங்குறானா என சிறிது நின்று பார்த்தவிட்டு வந்தாள்...இல்லையென்றால் அவள் நகர்ந்ததும் முழித்துவிடுவான்...

இப்போது கதிரின் மேல் வந்து வாகாகப் படுத்துக்கொண்டாள்...ரொம்ப பண்றான் என்று மகனின்மேல் புகார் வாசிக்க கதிருக்கோ புன்னகை ... 

எதுக்கு மாம்ஸ் சிரிக்கீங்க...

“இங்கயே ஒரு ஆட்டுவால சமாளிக்க முடியாம நான் திண்டாடுறேன்....ஆனா நீ நம்ம பிள்ளைய வாலுனு சொன்னால அதுதான் நினைச்சு சிரிச்சேன்...”என்று மேலும் சிரிக்க...

அவளோ அவனது மீசையை இழுத்து பிடிக்க...அவளை கீழேத்தள்ளி அவள் மேல் படர்ந்திருந்தான்...

நிலாவோ மாம்ஸ் மூச்சுமுட்டுது ...தள்ளுங்க...

மெதுவா சரிந்துப் படுத்தவன்...தனது கரங்களால் மெதுவாக அவளது இடுப்பினை அழுத்த சேலை மறைக்காத இடத்தில் அவனது கரத்தின் வெப்பம் தெரிய...தனது உதட்டினைக் கடித்து தன்னை சமன்படுத்தியவளின்...உதட்டினை மென்மையாக கடித்து இழுத்து தனது வாய்க்குள் வைத்தான்...

மனையாளின் கரங்களோ கணவனின் சிகையைப்பிடித்துக்கொண்டது...மெதுவாக தலையைத் தூக்கி நிலாவின் கண்களைப் பார்க்க அது ஆயிரம் கவிதைகளை அவனிடம் சொன்னது...

நிலாவின் கழுத்தில் தன் தலையை வைத்து எதோ பேச அவளுக்கு கேட்கவில்லை...என்ன சொன்னீங்க என்று மறுபடியும் அவள் கேட்டதும்...

மனையாளின் முகத்தைபற்றி ஆயிரமுத்தங்களை வைத்தவன்...நீ மட்டும் விடாப்பிடியாக என் வாழ்க்கைகுள் வரலைனா... நான் என்னவாகிருப்பேன்...

திருமணமே செய்திருக்க மாட்டேன்...இப்படி குழந்தைக் குட்டினு என் வாழ்க்கையில இடமேயில்லாமா போயிருக்கும்.. அம்மா அப்பவையும் வாழ்க்கை முழுவதும் வருத்திருப்பேன்....

ரொம்ப நன்றி. என்னை அளவில்லாதக் காதலால் காதலிக்கறதுக்கு...நம்ம வேதாவைத் தந்ததுக்கு... என் வாழ்கையை மாற்றியாதுக்கு என்று ஒவ்வொரு நன்றிக்கும் அவளது இதழ்களில் தனது உதட்டால் முத்திரைப் பதித்தான்...

இப்போது நன்றாக உள்ளத்தாலும் உடலாலும் இருவரும் இளகியிருந்தனர்...

கதிர் அவளது உடையை ஒவ்வொன்றாக களைந்தவன்...அவளின் கழுத்தில் முத்தம் வைத்து மெதுவாக கீழிறங்க...பெண்மையோ இந்தத்தாக்குதல் தாங்கது...எச்சில் விழுங்கி... உணர்வில் தலைசாய்க்க...தனது உணவினைக் கண்டவன்போல பசியாற அவளது கனிகளை தான் சுவைத்துக்கொண்டிருந்தான்...

தனது நாவினை உணர்வுத் தூண்டுகோலாகப் பயன்படுத்த...உணர்ச்சிகளால் துடித்து வெடித்து சிதறினாள் நிலா...

இன்னும் வோண்டும் என்று கடித்து வைக்க வலியில் ...ஸ்ஸ்ஸ்...அவனைத் தள்ளிவிட்டாள்...கள்ளனவன் மீண்டுமாக முயற்சிக்க...

கடிக்ககூடது என்ற கட்டளையுடன் அவள் அனுமதிக்க...கட்டளையெல்லாம் மிறினால்தானே அது கதிர்...மீண்டும் கடித்துவைக்க..

ஸ்ஸ்ஸ்...வலிக்குது மாம்ஸ் என்று புகார் வாசித்தாள்...இதெற்கெல்லாமா விசாரனைத், தண்டனையெல்லாம் உண்டு...

கதிரோ நிலாவிற்குள் முழுவதுமாக தன்னை இறக்கி என்றுமில்லாது இன்று  

அவனது செயலில் வேகம் வேகம் ...

இரு இதயமும் இணைந்து இரு உடலும் பின்னிப்பிணைந்து...தங்களது இணையுடன் சங்கமித்து சந்தோசித்தனர்..

நிலாவோ அவனை அறிந்தவளாதலால்...அவனைத்தாங்கி அவனது உணர்வுகளுக்கு ஈடுக்கொடுத்தாள்...

இயற்கையில்...கதிரின் ஒளியைவாங்கி ஒளிவீசம் நிலவு...அதற்கு முற்றிலும் மாற்றாக...

இங்கயோ நிலவிடம் கொஞ்சம் காதல் வாங்கி... 

கதிர் அவன் நிலவிடம் கொஞ்சும் காதல் செய்தான்....

அத்தியாயம்-25

கல்லூரியிலிருந்து வீடு வந்த கதிர் நிலாவைத் தேடினான்... நிலா வந்தவுடன் அவளை விசாரிக்க ஆரம்பித்தான்... உங்க காலேஜ்ல என்னடி பண்ணி வச்ச நீ வரதுக்கு முன்னாடியே என்கிட்ட செய்தி வந்துட்டு...

நிலாவோ பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றிருந்தாள்...

இப்போ பதில் சொல்றியா என்ன?

அதுவா அந்த சொட்டைத்தலையன் எப்பவும் நான் எடுத்த தலைப்பை குறையா சொல்லிட்டிருந்தாரா...அதான்...

அவருக்கிட்ட கேட்டேன்...

என்னக்கேட்ட அவருக்கிட்ட?

உங்களுக்கு யாரு பி.எச்.டி பட்டம் கொடுத்தானுக் கேட்டேன்...அப்புறம் முதல்ல தலைப்பு காண்பித்து, எல்லாம் சரின்னு சொல்லும்போது கண்ணாடி மறந்து வீட்டுல வச்சுட்டு படிச்சு சொன்னீங்களானுக் கேட்டேன்...

அறிவு இருக்கா இப்படி பேசினா உன்னோடு தீசிஸ்க்கு உதவி பண்ண மாட்டாங்க.. பி. எச் .டி. முடிக்கவிடமாட்டாங்க..தெரியுமா உனக்கு..என்று தலையில் கைவைத்தான்...

போங்க மாம்ஸ்.. இதுக்கு தான் சொன்னேன் நம்ம காலேஜிலயே பிஎச்டி பண்றேன் நீங்க தான் கேட்கல.. இந்த சொட்ட மண்ட எல்லாம் என்ன கலாய்க்கிறார் ...நான் என்னப் பண்றது என்றுக் கேட்டதும்..கதிர் கொஞ்சம் சமாதானமாகி இருந்தான்...

நிலாப்பஞ்சாயத்து முடிந்து, அவனுக்கு டீ போட்டுக் கொடுத்தவள் அவனருகிலயே அமர...

கதிரின் சீமந்தபுத்திரன் அடுத்த பஞ்சாயத்தோடு வந்தான்...

இப்போது வேதா பள்ளி விட்டு வீட்டுக்கு திரும்பி இருந்தான், சித்ரா அவனை அழைத்து வந்திருந்தார்.

அவன் அழுதுகொண்டே வந்து, கதிரின் அருகில் இருந்தவன்... நான் இனி ஸ்கூலுக்கு போக மாட்டேன்..டீச்சர் காதை திருகிட்டாங்க என்று அழுது கொண்டிருந்தான்...

சித்ரா பேரன் அழுவதை கண்டு.. என்னன்னு கேழுயா...வர்ற வழியிலயே ஒரே அழுகை ... அப்படின்னு சொல்லவும்....

கதிர் விசாரிக்க அவன் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான்...நிலாவோ மெதுவாக எழுந்து இனி இங்கயிருந்தா சரிவராது என்று சமயலறைக்குள் புகுந்துக்கொண்டாள்...

கதிர் வேதாவை எடுத்து தன் மடியில் வைத்து அவன் தலையை கோதி விட்டுக் கொண்டிருந்தான்.. என்னாச்சு எதுக்கு ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு சொல்லுற என்று மகனை விசாரிக்க.. அவன் பதில் சொல்லாமல் அழவும் ...

இப்போது கதிர் நிலா என்று சத்தமாக கூப்பிட தன் மகன் ஏதோ செய்து வைத்துவிட்டான் என்று ஓடி வந்து நின்றாள் ...

கதிரோ முறைத்துக் கொண்டு நின்றிருந்தான். இதை கண்ட நிலா மெதுவாக கண்களால் மகனிடம் என்னவென்று கேட்க ,வேதாவும் அவளது தகப்பனை கண்களால் சுட்டிக்காட்டினான்...

என்ன அம்மாவும் மகனும் கண்களாலே பேசுறீங்க.. அவன்கிட்ட என்ன என்று விசாரித்து கேளு...எதுக்கு ஸ்கூலுக்கு போக மாட்டேனு சொல்றானுக் கேளு...

நிலாவோ குனிந்து வேதாவிடம் கேட்டாள் என்னமா நடந்துச்சு? என்று. அவனோ மீண்டும் அழ தொடங்கினான்...டீச்சர் என்னை அடிச்சுட்டாங்க நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று.

நிலாவை முறைத்து பார்த்தவன்...உன்னை மாதிரியே வளர்த்து வச்சிருக்க என்று கோபத்தில் தனது அறைக்குள் சென்று விட்டான்... 

சித்ராவும் நிலாவும் வேதாவை மெதுவாக சமாதனப்படுத்தி அவனுக்கு சாப்பாடு ஊட்டி அவனிடம் கதைகளை கேட்க ஆரம்பித்தனர் வேதாவும் மெதுவாக தன் மழலை மொழியில் பள்ளியில் நடந்த அனைத்து விஷயங்களையும் கூறியிருந்தான் அதை கேட்டு மாமியாரும் மருமகளும் வாய்விட்டு சிரித்தனர்...

அதாவது வகுப்பில் துக்கத்திற்கான நேரத்தில் நன்றாக தூங்கிட்டிருந்த ஒரு பையனின் காதில் சிங்கம் கத்துவதுப்போல கத்த அந்த பையன் அலறி அடித்துக்கொண்டு வகுப்பிலிருந்து வெளியே ஓடியிருக்கான்...அந்தப் பையனை சமாதனப்படுத்த முடியாமல் ஆசிரியர் திண்டாட வகுப்பில் பிள்ளைகள் எல்லோரும் சிரித்திருக்கின்றனர்...அதுதான் ஆசிரியர் காதைப்பிடித்து திருகி...அப்பாவைக் கூட்டிட்டுவரச் சொல்லிருககாங்க என்றான்...

மகனை தூங்க வைத்துவிட்டு மெதுவாக தனது அறைக்குள் நுழைந்த நிலாவோ கதிரின் அருகில் அமர்ந்து "வர வர இந்த மீசைக்கார மாமாவுக்கு ரொம்ப கோபம் வருது, சின்னவன் கிட்டயே ஏன் அவ்வளவு கோபப்பட்டீங்க” என்று கேட்டாள்...

அது இல்லைடி "நான் அப்பாவுக்கு பிடித்த பிள்ளையா நடந்தேன்...ஆனா இவனை பாரு எல்லா இடத்துலயும் சேட்டைக்காரன்னு பெயர் வாங்கிட்டு வரான்" என்றுக் கவலைப்பட்டான்.

இப்பவே அவன அதை செய்யாதே இதை செய்யாதே என்று கட்டுப்படுத்தக்கூடாது, வளரும்போது சரியாயிடுவான் நீங்க எதுக்கும் டென்ஷன் ஆகாதிங்க...அப்படியே நிலா பேச்சை மாற்றி இருந்தாள்

நாளைக்கு ஊருக்கு போகணும் என்ன எல்லாம் எடுத்து வைக்கணும்... சொல்லுங்க எத்தனை நாள் அங்கு தங்கபோறோம் என்று நிலா கேட்டதும், ஒரு மூணு நாளைக்கு தங்க போறோம் அதுக்கு தேவையானது எல்லாம் எடுத்து வை என்று சொல்லி அவன் அப்படியே படுத்து விட்டான்...மெதுவாக மகனின் சேட்டையையும் சொல்ல...சிரித்தவன்...உன்னையும் மாத்தமுடியாது உன் பையனையும் மாத்தமுடியாது... அடுத்தப்பிள்ளை பெண்பிள்ளையா பிறந்து என்னைய மாதிரி சமத்தா இருக்கணும் கடவளே என்று வேண்டினான்...

ரொம்ப பண்றீங்க மாம்ஸ் அடுத்த பாப்பா பிறந்தா அவ என்னைவிட சேட்டை பண்ணப்போறா என்றதும்..

அவளது வாயைப் பொத்தியவன்..இந்தக் கதிர் தாங்கிக்கமாட்டான்மா...வேண்டாம் படுத்து தூங்கி என்று சொன்னவன்..அவளையும் சேர்த்திழுத்துப் படுத்துக்கொண்டான்

அடுத்த நாள் காலையில் நான்கு பேரும் கிளம்பி மதுரைக்கு சென்று சேர்ந்தனர்.

அங்கு சென்று திருவிழாவில் கலந்து கொண்டனர்.. கோவிலில் வேதநாயகத்திற்கு கொடுக்கக்கூடிய சிறப்பு மாரியாதை... அதை கதிருக்கு கொடுத்தனர்.

கதிருக்கு அவன் பிறந்த ஊரை ரொம்ப பிடிக்கும் அவனுடைய வாழ்க்கை இங்கேயே இருக்கணும் என்று ஆசைப்பட்டான். ஆனால் வாழ்க்கையோ அவனுக்கு வேறு விதமாக அமைந்திருந்தது.

கதிரின் மகனோ அந்த ஊரில் ஒரு இடம் விடாமல் சுற்றித் திரிந்தான்...அந்த இயற்கை சூழலும் அந்த ஊரும் அவனுக்கு அவ்வளவு பிடித்திருந்தது... தன் தகப்பனைப் போல அவனுக்கும் அந்த ஊர் சிறந்ததாகவே இருந்தது...

ஊருக்கு கிளம்பி வரும்போது சித்ரா வீட்டின் பின் பக்கம் இருந்த தோட்டத்திற்கு சென்று, பூக்களை பறித்து தொடுத்து நிலாவிற்கு வைத்துவிட்டார் எப்போதும் போல இப்போதும்... நிலாவிற்கு இருந்த கொஞ்ச நஞ்ச மன சஞ்சலங்களும் நீங்கிவிட்டது.

கதிரின் அத்தை மக்களும் தங்களது பகையை மறந்து, விரோதத்தை விட்டு அவனிடம் சொந்தம் பாராட்டினார்கள், எல்லாவற்றுக்கும் கதிரை தேடினார்கள்

கதிர் நிலா ஊருக்கு வந்திருந்த மூன்று நாட்களுமே மணி அரசுதான் அவர்களுக்கு விருந்து வைத்தார் .

அவருக்கு கதிர் நிலாவின் வாழ்க்கை நன்றாக அமைந்தது மிகுந்த சந்தோஷம் அதுவுமில்லாமல் அவரது நண்பனின் மகன் தன்னால் அவனுடைய வாழ்க்கை போய்விட்டதே என்று கலங்கி இருந்தவர் இப்பொழுது மிகுந்த சந்தோஷப்பட்டார்

மதுரையிலிருந்து கிளம்பி மீண்டும் சென்னை வந்து ஒரு வாரம் ஆகியது. முன்னறையிலிருந்து பேசிக்கொண்டிருந்த நிலா அப்படியே மயங்கி சரிய சித்ரா,பயந்து, பதறி விட்டார் உடனே கதிருக்கும் நிலாவின் தாய் ஜோதிக்கும் அழைத்து சொல்லிவிட்டார்.

மருத்துவமனைக்கு கொண்டுசென்று பரிசோதனை செய்ததில் இரண்டாவது கர்ப்பமாக இருக்கிறாள் என்று முடிவு வந்தது...

நிலாவிற்கு மிகுந்த சந்தோஷம்...அன்று இரவு கதிரின் நெஞ்சில் சாய்ந்திருந்தள் நிலா 

கதிர் பேசினான் "இரண்டாவது பிள்ளையும் உன்னை மாதிரியே சேட்டை செய்தால், நான் எப்படி சமாளிப்பேன்டி..

"அதுவா மாம்ஸ் அது உங்கள் தலைவிதி சமாளிச்சுதான் ஆகனும், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது" என்று சொல்லி சிரித்தாள்

“அதுவும் சரிதான்... சமாளித்துதான் ஆகணும்.. உன்னையவே சமாளிக்கிறேன்... என் பிள்ளைகள் நான் சமாளிக்க மாட்டானா.. சமாளிகிறேன்...வேற வழி..”என்று பேசியவன். அப்படியே இரு கரங்களாலும் அவளது முகத்தைப் பற்றி முத்தமிட்டான்

“எப்பவும் இப்படியே சந்தோஷமா இருக்கணும் என் மொசக்குட்டி” என்றவன் அப்படியே அவளை அணைத்துக் கொண்டான்...

அடுத்த நாள் கல்லூரியில் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அவனுக்கு அழைப்பு வர எடுத்துப்பார்த்தான்...அது சித்தார்த்...

சித்தார்த் கல்லூரி வாயிலில் கதிருக்காக காத்திருந்தான்...கேன்டீன் அழைத்துச் சென்று என்னவென்று கேட்க ...

சித்தார்த் "வீட்ல பொண்ணு பார்க்க வேண்டாம் என்று சொல்லுங்க கதிரத்தான்.. நீங்க சொன்னா அப்பாவும் அம்மாவும் கேட்பாங்க...”

என்ன திடீர்னு இப்படி சொல்றீங்க காரணத்தை சொல்லுங்க நான் மாமா அத்தை கிட்ட விவரமா பேசுறேன் என்று கதிர் கேட்டதும் ...சித்தார்த் பதில் சொன்னான்.

"அது நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்... அந்த பெண்ணைத்தான் கல்யாணம் செய்யணும்னு ஆசைப்படுறேன்"

கதிர் "ஓ அப்படியா சங்கதி.. அதுதான் இவ்வளவு நாள் தள்ளிப் போட்டுட்டு இருந்தீங்களா? "

அதுக்காக இல்லத்தான் அந்த பொண்ணு இன்னும் சம்மதம்ம் சொல்லல..அதுதான் காத்திருக்கேன்..அவளுக்கு என்ன ரொம்ப பிடிக்கும் அதுதான்...என்றும்... சம்மதம் கிடைத்த உடன் உங்க எல்லார்கிட்டயும் வந்து சொல்லி கல்யாணம் பேசலாம்னு இருந்தேன்... அதுவரைக்கும் இந்த பொண்ணு பாக்குற விஷயம் எல்லாம் வேண்டாம்... வேற எந்த பொண்ணை நான் பார்க்கப்போக எனக்கு பிடிக்கலை தயவுசெய்து அப்பாகிட்ட மட்டும் பேசுங்கத்தான்...

சரி நான் பேசுறேன் இது நிலாவுக்கு தெரியுமா?

தெரியாது ... அவ கிட்ட சொல்ல வேண்டாம் சொன்னா வேற மாதிரி ஆகிடும் வேண்டாம்..

நித்யா செய்த தப்பா நான் செய்திரக்கூடதுனு கவனமா இருக்கேன் கதிரத்தான்...என்னை புரிஞ்சுப்பீங்கனு நினைக்கிறேன் என்றதும்...கதிர் அவனுக்கு தைரியம் சொல்லி அனுப்பினான்

அடுத்த நாளே கதிர் தென்னவன் ஜோதிடம் பேசியிருந்தார் இப்பொழுது சித்தார்த்துக்கு பொண்ணு பார்க்க வேண்டாம் கொஞ்ச நாட்கள் போகட்டும் என்று...

மாதங்கள் கடக்க நிலாவை மருத்துவமனையில் சேர்த்து இருந்தனர் பிரசவத்திற்காக...

கதிர் நிலாவிற்கு பெண் குழந்தை பிறந்தது... கதிருக்கு அவ்வளவு சந்தோஷம்.. அவன் பெண் குழந்தையை தான் எதிர்பார்த்து இருந்தான்.. அதேபோல பெண் குழந்தை பிறக்கவும் அவ்வளவு சந்தோஷம் கொண்டாடினான்...

ஒரு ஆண் ஒரு பெண் என்று அவர்களது குடும்பம் இப்பொழுது பூரணமாக இருந்தது

இனி அவன் பிள்ளைகளும் மனைவியும் எவ்வளவு சேட்டைகள் செய்தாலும் கதிர் சமாளித்துக்கொள்வான்...அவளது மனைவி நிலா கொடுக்கும் காதலே... ஆரன் கதிருக்கு எல்லாவற்றையும் சமாளிக்கும் திறனைக்கொடுக்கும் என்று நம்புவோம்....

இருவரின் காதல் வாழ்வும் இனிமையாக சூரியனும் நிலவும்போல என்றென்றும் நிலையாக அமையட்டும்...

                                                    ******************************* முற்றும்********************************